Friday 14 January 2022

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள மறைந்திருக்கும் சூட்சும வேறுபாடுகள் என்ன?

 

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்று நாம் கேட்டவுடன், மேற்படையாக பல வேறுபாடுகளை கூறுவார்கள்.தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன.சமஸ்கிருதத்தில் இத்தனை உள்ளன. தமிழ் இலக்கணம் எப்படி, சமஸ்கிருத இலக்கணம் அப்படி இப்படி என்றெல்லாம் பல கதை சொல்வார்கள். ஆனால் அவைகள் எல்லாம் உண்மையில் நம்மை திசை திருப்பும் உத்திகளே. சில மறைந்திருக்கும் முக்கியமான சூட்சுமங்களை மறைக்க, நாம் அதை கண்டு பிடிக்காமல் இருக்க, அவர்கள் கையாளும் தந்திரமான உத்திகளே அவை .

உண்மையில் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் என்ன வேறுபாடுகள் மறைந்திருக்கிறது? அது அதை பேசுபவர்களை எந்த அளவு மாற்றுகிறது/ பாதிக்கிறது? என்பதெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். அதை பற்றிய விரிவான ஆராய்ச்சி பதிவு தான் இது.

முதலில் சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு மொழியா என்பதைக் குறித்து ஆராயலாம். பொதுவாக,மொழிக்கு உண்டான இலக்கணங்கள் என்னென்ன?

  1. மொழி என்றால் முதலில் ஒரு இனம் இருக்க வேண்டும். அந்த இனம் அந்த மொழியை பேச வேண்டும். ஆங்கிலத்தில் இதை native speakers என்பார்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் என்ற இனம் இருப்பதால் ஆங்கிலம் என்ற மொழி உருவானது. தமிழர்கள் என்று ஒரு இனம் இருப்பதால் தமிழ் என்ற ஒரு மொழி உருவானது. ஆக,மொழியை உருவாக்குபவர்கள் அந்த மொழி பேசும் இனத்தவர் தான். இனமே இல்லையென்றால் அதற்கு ஒரு மொழி இருக்க வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம்.சமஸ்கிருத இனம் என்று ஒன்று இல்லாததால், சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருக்க வாய்ப்பேயில்லை! ஏனென்றால், அதை உருவாக்க ஒரு இனம் இல்லை.
  2. மொழியின் இரண்டாவது இலக்கணம் என்னவென்றால், அந்த மொழியை தாய் பேச வேண்டும். அதாவது தாய் அந்த மொழியை பேசி குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்! அதனால்தான் மொழியை தாய் மொழி என்கிறார்கள். இந்துக்களின் மரபுப்படி சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆக,பெண்கள் பேச முடியாத ஒன்று தாய்மொழியாக வாய்ப்பில்லை. ஒரு மொழி தாய்மொழி இல்லை என்றால், அது மொழியே இல்லை என்பதை உணர வேண்டும்.
  3. ஆக மேற்கண்ட இரண்டு காரணங்களுக்காக, சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே இல்லை என்பது உறுதியாகிறது.
  4. அப்படி என்றால் சமஸ்கிருதம் என்பது என்ன? கணினி படிப்பவர்கள் கோபால், ஜாவா போன்ற கணினி மொழிகளை படிப்பார்கள். அந்த மொழிகளைப் பேச முடியாது. அவைகள் உண்மையில் மொழி அல்ல. அவைகள் ஒரு Code எனும் குறியீடு ஆகும். சமஸ்கிருதமும் அதேபோன்ற ஒரு குறியீடுதான். பேசப்படாத எந்த மொழியும் sign language, morse code போன்ற குறியீடுதான்.
  5. சமஸ்கிருதம் நமது சரித்திரத்தில் எப்போதும் பேசப்பட்டது இல்லை என்பது உறுதி.ஏனென்றால் தாய் அதைப் பேச முடியாது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு அதை அவள் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆக,சரித்திரத்தில் அதை ஒருபோதும் ஒருவரும் பேசி இருக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்தப் பின்னணியில் அந்த குறியீட்டின் தன்மையை இயல்பை ஆராய்ந்து அதன் தன்மையை தமிழ் மொழியுடன், நடுநிலையோடு ஒரு ஒப்பீடு செய்வோம்.

  • வாய்மை, நேர்மை, அறம், விஞ்ஞானம் இவைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டை சார்ந்தது தமிழ் மொழி.
  • புனைவுக் கதைகள் ( புராணம்), தந்திரம், மூடநம்பிக்கைகள், போன்றவைகளின் அடிப்படையில் அமைந்தது சம்ஸ்கிருத குறியீடு.
  • ஆக, தமிழை பேசப் பேச நேர்மை, அறம்,விஞ்ஞான அணுகுமுறை போன்ற நல்ல குணங்கள் பலப்படும்.
  • சம்ஸ்கிருதத்தை நெருங்க நெருங்க, மூடநம்பிக்கை, கேள்வி இல்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, அறத்திற்கு எதிரான வாழ்க்கை,அடிமைத்தனம் போன்ற குணங்கள் பலப்படும்.
  • இதை ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலமாக விளக்குவது நன்று என்று நினைக்கிறேன்.மிகவும் அடிப்படையான, பிள்ளைகளுக்கு பெயரிடும் முறையை எடுத்துக் கொள்வோம்.
  • தமிழில், கயல்விழி, தேன்மொழி, இளவரசன், தமிழ்நம்பி போன்ற தெளிவான பொருளுள்ள பெயர்கள் இடுவது வழக்கம். தேன்மொழி என்றால் அவள் பேசுவது தேன் போல இருக்கிறது என்று அர்த்தம். இளவரசன் என்றால் அரசனின் இளவல் என்று அர்த்தம். தெளிவாக புரியக்கூடிய பொருள் கொண்ட பெயர்கள் தமிழ் பெயர்கள்.
  • சம்ஸ்கிருத பெயர்களை இப்போ து எடுத்துக்கொள்வோம். பத்மநாபன் என்றால் ' தொப்புளில் தாமரை உள்ளவர் 'என்று பொருள்.
  • தொப்புளில் யாருக்கும் தாமரை இருக்காது. அப்படியானால் இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் ஒரு குறியீடு சமஸ்கிருதம் என்பது தெளிவாகிறது. இதுபோல், மகாலிங்கம் என்றால் ' பெரிய ஆண்குறி ' என்று பொருள்படும். தமிழில் இவ்வாறாக ஒரு பெயர் வைக்கவே முடியாது. அதன் பொருள் உடனே தெரிந்துவிடும். இது போல பல சம்ஸ்கிருத பெயர்கள் ஒத்துக்கொள்ள முடியாத பொருள் கொண்டவை. இதோ இந்தக் கட்டுரையை வாசித்து பாருங்கள்.
  • பெயர்களில் "தமிழ் சமஸ்கிருத" மொழியின் அர்த்தங்கள்

  • இவ்வாறாக ஒருவர் தொடர்ச்சியாக கற்பனையான, நம்பமுடியாத, அடிப்படையில்லாத பெயர்களையே கேட்டுக்கொண்டிருந்தால், அவருடைய ஆழ்மனதில் மூட நம்பிக்கைகள் வலுப்பெற்று விடும். நண்பனுடைய தொப்புளில் தாமரை மலர்ந்தது என்று சொன்னால் உடனே நம்பத் தோன்றும். என்ன சொன்னாலும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு மோசமான குணம் உருவாகி வலுப்பெறும். அதைக்கொண்டு, மக்களை ஆள்வது மிகவும் எளிதாக மாறிவிடும்.
  • ஆனால் தமிழ் அப்படியல்ல. ஒவ்வொரு பெயரிலும் ஒரு தெளிவான பொருள் இருக்கும். அதில் நம்பமுடியாத எதுவும் இருக்காது. எந்தவிதமான மூடநம்பிக்கையும் அதில் பொதிந்து இருக்க வாய்ப்பில்லை. தமிழ் கடவுள் பெயர் கூட அவ்வாறு தான் இருக்கும். சிவப்பாய் இருப்பவன் சிவன். கருப்பசாமி. அய்யனார். எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொருள் இருக்கும். அதை சுற்றி பெரும் மூடநம்பிக்கை கதைகள் எதுவும் இருக்காது.
  • தேவநேயப் பாவாணர் கூற்றின்படி தமிழ் சுமார் 50000 வருட சரித்திரம் கொண்டது. அதை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும், சிந்து சமவெளி நாகரிக மொழியாக தமிழ் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அது சுமார் 12000 வருட பழமையானது.
  • சமஸ்கிருதம் பேசப்பட்டதாக எந்த வரலாறும் இல்லை. எனவே அதை எத்தனை வருட பழமை கொண்டது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது.
  • தமிழ் இனத்தின் மொழி தமிழ்.
  • தமிழ் பிராமணர்கள் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய குறியீடு சம்ஸ்கிருதம். அவர்கள் சொந்த குடும்பத்திலே அது பேசப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ் அறம் சார்ந்த வாழ்வின் மொழி.
  • சமஸ்கிருதம் புராணம், புனைவு கதைகளின் குறியீடு.
  • தமிழ் சொற்களுக்கு தெளிவான பொருள் உண்டு ஒரு சொல்லுக்கு பல பொருள் கிடையாது. இடத்தைப் பொறுத்து பொருள் மாறுபடலாம். ஆனால் எல்லோருக்கும் அதே பொருள் தான் புரியும்.
  • சமஸ்கிருத சொற்களின் பொருள் கேட்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, பிதா என்ற சொல்லுக்கு 38 வெவ்வேறு பொருள் உள்ளன. கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். தெளிவான உரையாடல் சமஸ்கிருதத்தை கொண்டு சாத்தியமில்லை.
  • சமஸ்கிருதம் என்ற சொல்லே தமிழ் தான். சமம் + கிறுக்கல் = சமக்கிறுக்கல் > சமஸ்கிருக் > சமஸ்கிருதம்! ஆக மொழியின் பெயரே தமிழில் இருந்து சென்றிருக்கிறது.
  • தமிழ் மிகவும் சொற் செழிப்பு கொண்டது. சமஸ்கிருத சொற்கள் தமிழில் இருந்து வாங்கி, சிறிது மாற்றம் செய்யப்பட்ட, மாறுவேடம் இட்ட சொற்களே. சொந்தமாக சமஸ்கிருதத்திற்கு சொற்கள் கிடையாது.
  • தமிழ் இயல்பாக வளர்ந்த மொழி. சமஸ்கிருதம் வேண்டுமென்றே, அரச ஆதரவுடன் வளர்க்கப்பட்ட குறியீடு.
  • தமிழ், நீதி, நியாயம் அறம் இவைகளை நிலைநாட்டும் மொழி. சம்ஸ்கிருதத்தில் இவைகளுக்கு கொஞ்சமும் இடமில்லை.
  • தமிழ் எல்லோரும் பேசும் மொழி. சமஸ்கிருதம் 3% சிறுபான்மை பிராமணர்களின் குறியீடு.
  • தமிழ் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. சமஸ்கிருதம் வேறுபாட்டை / உயர்வு தாழ்வை மேம்படுத்துகிறது.
  • தமிழ் பேசினால் ஆயுள் காலம் கூடும். சம்ஸ்கிருதம் பேசினால் ஆயுள்காலம் குறையும். ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும், அடித் தொண்டையிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டும். ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பேச தேவைப்படும் முயற்சி அதிகமாக இருக்கும். அது ஆயுட்காலத்தை குறைக்கும். தமிழ் இயல்பான மொழி ஆதலால் பேசுவது ஆயுட்காலத்தை கூட்டும். பேசும் போது இனிமை தரும்.
  • தமிழ் பேசுவது புத்தியை கூர்மையாக்கும். சமஸ்கிருதம் பேசுவது மூளையை மழுங்கடிக்கும்.
  • தமிழ் தெளிவை மேம்படுத்தும். சமஸ்கிருதம் குழப்பத்தை அதிகரிக்கும்.
  • நல்லாட்சியின் மொழி தமிழ். அராஜகத்தின் மொழி சமஸ்கிருதம்.
  • இன்னும் இதுபோல பல உள்ளன. ஆனால் இதுவே போதும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

No comments:

Post a Comment