Thursday, 9 June 2022

சரித்திரத்தில் எப்போதும் பேசப்படாத தேவநாகரிக்கு எப்படி எழுத்துரு மட்டும் இருக்க முடியும்?



இந்திய மொழியியல் துறையில் பல கேள்விக்குரிய கருத்துக்கள் உலா வருகின்றன என்பது சில ஆர்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்களின் கருத்து .அதில் தலையாய ஒன்று பேசவேப்படாத தேவநாகரிக்கு எழுத்துரு இருக்கிறதுஎன்ற நம்பிக்கையாகும் .
எந்த ஒரு மொழியின் வளர்ச்சியும் ,முதலில் பேச்சு வழக்கில் தான் ஆரம்பிக்கும் .பின்னர் நன்கு வளர்ச்சி அடைந்த பின்னரே எழுத்துரு உருவாகும் .பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழிக்கும் எழுத்துரு தோன்ற வாய்ப்பே இல்லை என்பதை அந்த ஆர்வர்ட் அறிஞர்கள் அறுதியிட்டு சொல்கிறார்கள் .அப்படி ஒரு எழுத்துரு மட்டும் தனியே உருவாக்கப்பட்டால் ,அதை ‘குறியீடு ‘Code என்கிறார்கள் அவர்கள் .எடுத்துக்காட்டாக ,கணினி மொழிகளான ஜாவா ,கோபால்போன்றவற்றை சொல்லலாம் .
இந்தோ -யூரோப்பியன் மொழிக் குடும்பத்தின் இந்திய கிளையில் 3 வழக்கில் இல்லா /உயிரில்லாத மொழிகளான சமஸ்கிருதம்,பிராகிருதம் ,பாலி என்பவையும் 12 பேசப்படும் மொழிகளும் உள்ளது .இவை எல்லாவற்றிற்கும் பயன் படும் பொதுவான எழுத்துரு ‘தேவநாகரி ‘எனப்படுகிறது .இந்த எழுத்துரு நன்றாக உருப்பெற்ற ,உயிர் எழுத்து ,மெய் எழுத்துகள் கொண்டதாகும் .
இந்நேரத்தில் ,பல மொழிகளுக்கு எழுத்துரு கிடையாது என்பதை நினைவில் கொள்க .ஆக ,ஒரு மொழி என்றால் அதன் அடிப்படை 2 அம்சமாகும் .ஒன்று ,அதை பேசும் இன மக்கள் Native speakers இருக்கவேண்டும் .இரண்டாவதாக அந்த மொழி அன்றாட பேச்சு வழக்கில் இருக்கவேண்டும் .பேச்சின் ஒலிகளையே எழுத்துரு பிரதிபலிக்கும் என்பதை உணர வேண்டும் .ஆக ,பேச்சு இல்லையென்றால் எழுத்து தோன்ற முடியாது என்பது உறுதி .
இந்திய /உலக சரித்திரத்தில் எந்தக் கால கட்டத்திலும் ‘தேவநாகரி ‘என்ற பேசப்பட்ட மொழி ஓன்று இருந்தாக சான்றுகள் இல்லை .அப்படி ஒரு மொழியே இல்லையென்றால் ,தேவநாகரி என்ற இனமே இருந்ததில்லை என்று பொருள்படும் .அப்படி மக்கள் யாரும் இல்லையென்றால் ,தேவநாகரி என்ற எழுத்துருவை மட்டும் யார் உருவாக்கினர் ?எப்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது ?பேசாத மொழி எப்படி எழுத்துரு மட்டும் பெறும் ?
நான் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விழைந்தேன் .எல்லா திசையிலும் நோக்கி சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தேன் .இதோ என் ஆராய்ச்சியின் முடிவுகள் !
சாத்தியம் 1
இந்த எழுத்துரு ஏதாவது இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்து வந்திருக்க கூடும் .
முடிவுகள் :இந்த எழுத்துருவில் உயிர் ,மெய் எழுத்துக்களின் அமைவை ,எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது எந்த ஒரு இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்தும் இந்த தேவநாகரி எழுத்துரு தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது .
சாத்தியம் 2
இந்த எழுத்துரு ,இந்தியாவில் பேசப்பட்ட /பேசப்படும் மற்ற மொழிகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து இரவல் வாங்கியிருக்கலாம் .
முடிவுகள் : சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட மொழிகளை தவிர இந்தியாவில் நிலைபெற்ற ஒரே மொழிக் குடும்பம் தமிழ் மொழிக் குடும்பம் ஒன்றே .இதன் தலை மொழியான தமிழ் சுமார் 3000 வருடமாவது பழமையானதாகும் .இந்திய துணைக் கண்டத்தின் எல்லா பகுதிகளிலும் வ்யாபித்திருந்த மொழி தமிழாகும் .கி .மு .700 வாக்கிலே உயர் நிலையில் ஒரு இலக்கண நூலைக் கொண்டிருந்தது இது .தமிழ் எழுத்துரு தமிழுக்கு தகுந்தா ற் போல் அமைந்திருப்பதால் ,அது நிச்சயமாக அதன் சொந்த எழுத்துரு என்பது உறுதியாகிறது .
ஆக ,தேவநாகரி எழுத்துரு தமிழ் எழுத்துருவே எனக் கொள்ளலாம் .
இதை எப்படி உறுதிப் படுத்துவது ?
இதை உறுதிப்படுத்த சமஸ்கிருதத்தின் வழி வந்த இந்தி மொழியின் எழுத்துருவையும் ,தமிழ் எழுத்துருவையும் ஒப்பிட்டு பார்க்கலாம் .
உயிர் எழுத்துக்கள் :தமிழ் 12 இந்தி 13 என்றாலும் உண்மையில் 12 தான் .தமிழின் சில உயிர் எழுத்துக்கள் இந்தியில் இல்லை .இந்தியில் அதிகப்படியாக ரு,அம் என்ற உயிர் எழுத்துகளும் உண்டு .இவை இரண்டுமே உண்மையில் உயிர் எழுத்துக்கள் இல்லை .உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும் .இவைகள் சில இந்தியின் தொனிகளுக்காக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் ஆகும் .
மெய் எழுத்துக்கள் : தமிழில் 18 மெய் எழுத்துக்களும் ,இந்தியில் 30 க்கு மேலும் உள்ளன .கூர்ந்து நோக்கினால் ,இந்தியின் அதிகப்படியான எழுத்துக்கள் எல்லாமே ,தமிழின் 18 மெய் எழுத்துக்களின் ஒலி மாற்றப்பட்ட எழுத்துக்களே .எடுத்துக்காட்டாக ,தமிழ் மெய் எழுத்து , விற்கு ,இந்தியில் 3 கூடுதல் ஒலி மாற்றம் செய்யப்பட்ட எழுத்துக்கள் ,‘kha’,’ga’,’gha’ என்பதும் உள்ளது .இதுபோல ,தமிழ்  விற்க்கு ‘chha’ ’ja’ and’jha’ என்றுள்ளது .இந்த எழுத்துக்கள் எல்லாம் ,தமிழ் எழுத்தை அடிப்படையாக கொண்டு ,சிறிய மாற்றம் செய்து உருவாக்கப் பட்டதாகும் .
எடுத்துக்காட்டுகள் :தமிழ்  ,இந்தி அ ,தமிழ்  ,இந்தி க
மேற்கண்ட மறுக்கமுடியாத ஆதாரங்களால் ,தேவநாகரி என்று சொல்லப்படும் அந்த எழுத்துருவானது தமிழிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு ,சிறிது மாற்றப்பட்டது என்பது தெளிவாகிறது .
இந்த ஆராய்ச்சி கட்டுரையை ,அமெரிக்காவிலிருந்து வெளியாகும் லின்குய்ஸ்ட் லிஸ்ட் இதழில் வெளியிட்டு ,மொழியிலார்களின் கருத்தாய் கேட்டிருந்தேன் .யாரும் ,இதை மறுத்து பதிவிடவில்லை .ஜான்டேனியல் என்ற மொ ழியிலாளர் கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்திருந்தார் :
Devanagari is derived from the word Nagari, Nagar were ancient Tamil race who were important artisans, warriors who inhabitated in today's TamilNadu and Ancient Ceylon. Sri Lanka in ancient days was called Naga Dweepa. Recent Discovery of Tamili Scripts dates back to 500 BCE which proves the presence of Script in Tamillakam.
Credit : Linguist List LINGUIST List | Home
தமிழாக்கம் :
தேவநாகரி என்பது நாகரி என்ற சொல்லிலிருந்து வந்தது .நா கர் என்பவர்கள் ,தற்போதைய தமிழ் நாட்டையும் ,ஆதி கால ஸ்ரீ லங்காவையும் பூர்விகமாக கொண்ட கலைஞர்கள் ,போராளிகள் .ஸ்ரீ லங்கா அப்போது ‘நாக தீவு ‘எனப்பட்டது .சமீபத்திய தமிழ் எழுத்துரு கண்டுபிடிப்புகள் ,அவை கி .மு .500 காலத்தியது என்று காணப்படுகிறது .தமிழகத்தில் அப்போதே எழுத்துரு இருந்தது என்பதை அது காட்டுகிறது .
குறிப்பு :இவரும் தேவநாகரி எழுத்துரு தமிழ் மூலமே என்பதை உறுதி செய்திருக்கிறார் .

No comments:

Post a Comment