Friday, 31 July 2020

சமஸ்கிருதம் ஒரு மொழியே இல்லை !

சமஸ்கிருதம் என்ற மொழி(?) ,இந்தோ யூரோப்பியன் மொழிக் குடும்பத்தில் ஒரு மொழியாக கருதப்படுகிறது .இதிலிருந்து தான் இந்தி போன்ற பல மொழிகள் தோன்றியதாக பல காலமாக  சொல்லப்படுகிறது .இந்த மொழியை பற்றி பலவிதமான முரண் பட்டக் கருத்துக்கள் நிலவுகிறது .                                                                                                                           தற்போது   சில இந்தோ  யூரோப்பியன் மொழியிலாளர்கள் 'சம்ஸ்கிருதம்' என்று ஒரு மொழியே எக்காலத்திலும் இருந்ததில்லை என்று ஒரு கருத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் .
அவர்களின் சுவையான கேள்விகள் இதோ :

  • எந்த ஒரு மொழியும் தோன்ற ,ஒரு இனம் தேவை .இனமில்லாமல் எந்த மொழியும்  தோன்ற முடியாது .எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள் ,ஜப்பானிய மொழியை தோற்றுவித்தார்கள் .அதுபோல் ,தமிழர் தமிழையும் ,செர்மானியர் செர்மன் மொழியையும்    தோற்றுவித்தார்கள் .சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது ?
  • இரண்டாவதாக எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால் தான் மொழியாகும் .பேசப்படவில்லையென்றால் அது 'குறியீடு Code ' எனப்படும் .எந்த இயல்பான  மொழியும் ,பேச்சில் முதலில் தொடங்கி ,பின்னர் பெரு வளர்ச்சி அடைந்தபின் தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .பேச்சு நிலையையே தொடாத  எந்த இயல்  மொழியும் எழுத்து வடிவாகி ,இலக்கியமாக முடியவே முடியாது .                                               
  • சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும்  பேசபட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை.அப்படி அது பேசப்பட்டிருந்தால் ,இப்போது சமஸ்கிருதிற்காக உயிரையே விட தயாராக இருக்கும் ஒரு சிறு வகுப்பினராவது இன்னும் அதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஆனால் அப்படி இல்லை .தமிழ் பிராமணரே இப்போது சமஸ்கிருதம் பேசுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .
  • இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம் .இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால் ,அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் .அப்படியென்றால் ,ஏன் தற்போது ஒரு  10 லட்சம் மக்கள் கூட   சமஸ்கிருதம்  பேசுவதில்லை   ?
  • ஒருக்கால் ,பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால் ,பேசிக்  கொண்டிருக்கும் எந்த மொழியும்  நேராக அழிவதில்லை என்ற உண்மையை தெரிந்து கொள்வோம் .முதலில்  அதை பேசும் மக்கள் அழிய வேண்டும் .அப்போது தான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும் .அது  முதலில்  'அழிவின் விளிம்பு மொழியாக '(Endangered language) மாறி ,சில 1000 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் சில 100 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் ஒரு குடும்பம் பேசும் மொழியாகி ,கடைசியில்ஒருவர் பேசும் மொழியாகி இறுதியில் முற்றிலும் அழிந்து போம் .எடுத்துக்காட்டாக பிரேசிலில் 'வாரிக்கென' என்ற மொழி இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் .இந்த 20 பேரின் காலத்திற்கு பிறகு ,அது அழிந்து போகும் .                                                                                                      சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை இந்த விளிம்பு நிலை மொழி பட்டியல் உறுதி செய்கிறது முழு பட்டியல் .ஏனென்றால் சமஸ்கிருதம்  எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான் .
  • சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால் ,அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால் ,அதை பேசியவர்கள் ஒரு போதும்அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள் .
  • எந்த மொழியும் ,ஆண் ,பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும் .ஆனால் ,சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .ஆக ,பெண்களிடம் பேச முடியாத ,பெண்கள் பேச முடியாத ஒன்று ,பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
  • இவையெல்லாம் கணக்கில் கொண்டால் ,சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி  என்பது தெளிவாகிறது ..பேசப்படாதது  எக்காலத்திலும்மொழி ஆகாது .                              ஆனால்எழுதப்படாதது மொழி ஆகலாம்.பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் ,எழுத்துக்கள் இன்றி உள்ளன . 
  • மூன்றாவதாக ,மொழி என்றால் அது 'தாய் 'பேசும் மொழியாக கட்டாயம் இருக்கவேண்டும் .அதனால் தான் 'தாய் மொழி 'என அழைக்கப்படுகிறது .இந்து மத விதிகளின் படி 'பெண்கள் 'அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .ஆக ,சமஸ்கிருதம் 'தாய் மொழியாக 'வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள் .                                                                                              ஆக சமஸ்கிருதம் என்பது  ஒரு இயல்பு மொழி அல்ல .அப்படியென்றால் அது தான் என்ன ?                                                                                                            சமஸ்கிருதம் என்பது  உண்மையில்  ஒ ரு     இரகசிய குறியீடு (Code) மொழி தான் .ஜாவா ,கோபால் போன்ற ,கணினி குறியீடு மொழி போல ,அது  பேசும்மொழி அல்ல. .குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது .                                                                                                                                 அந்த குறியீடு மொழியில் பல இலக்கியங்களையும் ,படைப்புகளையும்,தகவல்களையும்  ஒரு சாராருக்கு மட்டும் புரியும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள் .
  • அடுத்தது பேசப்படாத மொழி ,பேசப்படும் மொழிகளுக்கு தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது .பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்கு தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .ஏனென்றால் ,பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான் .
  • பேசப்படாத ஒரு மொழி, சொற்களை பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .முடியாது என்பது தெளிவு .பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவு .பேச்சு வழியாக தோன்றிய சொற்கள் தான் ,பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை .(காண்க :http://sanskritandtamil.blogspot.in/2017/12/blog-post.html )
  • சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் ,சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது .சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருத சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள் தான் உருவாகியிருக்க முடியும்  என்பது தெளிவு .ஆக ,தமிழை தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே சமஸ்கிருத சொற்களை தமிழிலிருந்து உருவாக்கியிருக்க கூடும் .
  • மேற் கூறிய காரணங்களால் சமஸ்கிருதம் என்று  ஒரு மொழி இருந்ததாக சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது .
  • இந்த மொழியிலாளர்கள் இந்த கருத்துக்களை ஆர்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்கு சமர்ப்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு முக்கியமானது .ஆதலால் ,குறைந்தது 10 பேருக்காவது பகிரவும் .நன்றி .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11 comments:

  1. மொழி வெறியர்களால் சமஸ்கிருதம் அழிக்கப்படிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. யாரு பாஸ் அந்த மொழி வெறியர்கள். சமஸ்கிருதம் எந்த இடத்தில் நின்று கொண்டு இருந்த போது அழித்தார்கள், எந்த நூற்றாண்டில்? கொஞ்சம் சொல்லுங்க பாஸ்.

      Delete
  2. மிகத் தெளிவான கேள்விகளையும் பதிலையும் கொண்ட கட்டுரை முதல் இரண்டு கேள்வி பதில்களிலேயே அனைத்தும் வாதங்களும் சுக்கு நூறாகி விடுகிறது. சிறப்பு! இக்கட்டுரையை பகிர்ந்ததற்காக மிக்க நன்றி! --இறைக்கொடை @Anthuesmin Twitter

    ReplyDelete
  3. சமம்+கிருதம் அதாவது மொழி.இது அன்று வழக்கிலிருந்தோரின் தொடர்பு கொள் பொது கூட்டு மொழி.பல தரப்பட்ட வடமொழிகளின் தழுவல். இதை பல் சுவை கூட்டிய உணவு எனவும் கருதலாம். இதன் மூலம் அன்றைய பேச்சு வடமொழிகள். அவைகளின் மூலம் சிந்து சமவெளி வாழ் முன்னாள் ட்ரெம்மிலி பின்னாளைய தமிழர் கூட்டத்தின் பேச்சு மொழி ட்ரெம்மிலி அல்லது தமிழ்.அதை பேசியவன் ட்ரெம்மிலன்.அவனே பின்னாளைய தமிழன்.இதற்கான ஒப்புவமைகளை வலுவாக சுட்டிகாகாட்ட இயலும்.

    ReplyDelete
  4. இன்றைய இந்து மத உணர்வை தமிழரிடம் நிலை நிறுத்தி வளர்த்தவர்கள் அன்றைய தமிழ் மாமன்னர்கள.கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழன் என்று நடை முறைக்கு முரணாக எடக்கு மடக்காக பொருள் பொதிக்கப்பட்ட அலங்கார வார்த்தைக்குரிய தென்னக காட்டு வாசிகளுக்கு கடவுள் பற்றியும் இறை நெறி எது என்பது பற்றியும் எள்ளளவும் தெரியாது. தென் புலம் ஏகிய அன்றைய அசல் சிந்து தமிழரிடை அக் காட்டு வாசிகள் ஐம்புலன்களில் கலந்து தமிழராயினர். வடக்கிலிருந்து தேற்கே தாவிய தமிழரின் கடவுள் சிவன். அந்த சிவனோடு வந்த கூட்டம் தமிழரிடை இறை பக்தியை வளர்த்ததுடன் இன்றைய தமிழகத்தை ஆன்மிக பாதையில் உயர்த்தியது.
    அதனை செய்தவர்களை ஆரியர் என பழிப்பது முனை மரக்கிளையிலமர்ந்து அடிமரத்தை வெட்டுவதற்கு இணை.

    ReplyDelete
  5. எனது இப்போதைய வினா
    எவருக்காவது தில் இருந்தால் ஆரியன் யார் திராவிடன் யார் அவர்களின் வாழ்வாதாரங்கள் பிறப்பிடங்கள் எது என சரியான விளக்கம் தர முடியுமா.

    ReplyDelete
  6. கொசு கடிக்கும்.ஈ மொய்க்கும்.இதில் கொசுவை விட ஈயே நல்லது. ஈ வியாதிகளை வெளியே பரப்பும்.கொசு கடித்து நமைச்சல் அரிப்பு கலந்த விஷம் மனித உடலுக்குள் சென்று வியாதியை பரப்பும். தமிழனுக்குள் புகுந்த திராவிட கொசு உள்ளிருந்து ஆளைக் கொல்லும். ஈ என்ற ஆரியம் தன் பிழைப்பை மட்டும் மொய்க்கும்.

    ReplyDelete
  7. சிறப்பான ஆய்வு

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete