இந்திய சரித்திரத்தின் படி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 1639 ல் வந்து இறங்கினார்கள் .ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே அவர்கள் அன்று மெட்ராஸ் எனும் தென்னிந்திய ஒரு கடற்கரையில் கால்பதித்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் 400 வருட நீண்ட ஆட்சி இந்தியாவில் செய்யப் போகிறார்கள் என்று அன்று அவர் கிஞ்சித்தும் நினைத்திருக்க வாய்ப்பில்லை .
அவர் இறங்கியது மெட்ராஸ் ஆக இருந்தாலும்,காலப்போக்கில் கல்கத்தா ,அதாவது தற்போதைய கொல்கொத்தா,தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாறியது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியாவில் அமைக்க இந்தியாவில் அப்போது மேல்தட்டு மக்களாக இருந்த தென்னிந்திய பிராமணர்களை தங்களுடைய அலுவலக வேலைகளுக்கு அமர்த்திக் கொண்டார்கள். வேலைக்காக கல்கத்தா சென்ற தமிழ் பிராமணர்கள் அப்போது கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் ஆங்கிலேயரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதியாக இருந்தாலும் , மொழிகளில் ஒரு தனி ஆர்வம் கொண்டவராக இருந்தார் .ஆதலால் இந்திய மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார் .இந்த வாய்ப்பை ,நல்வாய்ப்பாய் பயன்படுத்தி அவரிடம் நெருக்கமாக இருந்த தமிழ் பிராமணர்கள் இந்தியாவின் பூர்வ மொழி சமஸ்கிருதம்தான் என்றும் சமஸ்கிருத பண்பாடு தான் இந்தியாவின் அடிப்படை பண்பாடு என்றும் தவறாக சொல்லி நம்ப வைத்து விட்டார்கள் .தமிழ் என்று ஒரு தொன்மையான மொழி ஒன்று இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் சொல்லவில்லை .சர் வில்லியம் ஜோன்ஸ், கிரேக்கம், லத்தின் போன்ற ஐரோப்பிய மொழிகளை அறிந்திருந்தார் .அவர் பார்வையில் பல சொற்கள் சம்ஸ்கிருதத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் பொதுவாக காணப்பட்டது .ஆதலால் அவர் சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றுதான் அல்லது சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பிறவி தொடர்பு உள்ளது என்ற ஒரு தவறான கருத்துக்கு வந்திருந்தார் . ஆதலால் அவர் சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகள் இவையெல்லாவற்றையும் ஒரு குடும்பம் ஆக்கி அதை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்று பெயரிட்டார் . சர் வில்லியம் ஜோன்ஸ், அவர் உண்மை என்று நம்பிய இந்த தவறான கருத்துகளை ஐரோப்பா முழுவதும் ,ஆசியாட்டிக் சொசைட்டி என்ற ஒரு அமைப்பை 1786 ல் நிறுவி பரப்புரை செய்தார் .
இந்திய மண்ணில் தோன்றிய மொழியான தமிழைப் பற்றி சர் வில்லியம் ஜோன்ஸ்க்கு ஒன்றுமே தெரியவில்லை. காரணம் அதைப்பற்றி அவருக்கு யாரும் சொல்லவில்லை .ஆதலால் அவர் அவருடன் நெருக்கமாக இருந்த தமிழ் பிராமணர்கள் சொன்ன சம்ஸ்கிருதம் பற்றிய கருத்துக்களை முற்றிலும் நம்பி விட்டார்.
அதே சமயம் தென்னிந்தியாவின் மெட்ராசில் பிரான்சிஸ் ஒயிட் வில்லிஸ்(1777-1819) என்ற ஆங்கிலேயர் கலெக்டராக வேலை பார்த்தார் . அவருக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது .அவர், தமிழ், மண்ணின் மொழி, அதற்கு 44 கிளை மொழிகள் உள்ளன ,அவைகளை தென் இந்தியர்கள் பேசுகிறார்கள் .ஆனால் சம்ஸ்கிருதத்தை யாரும் பேசுவதில்லை .சம்ஸ்கிருதத்தை கோயில்களில் பஜனை செய்வதற்கும் , பூஜை செய்வதற்கும் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் , என்பதை எல்லாம் அறிந்திருந்தார் .ஆதலால் பிரான்சிஸ் வில்லிஸ் ,சர் வில்லியம் ஜோன்ஸ் அவர்களின் மொழியறிவு தவறான தகவலால் பாதிக்கப்பட்டதையும் அறிந்திருந்தார் .
இந்த பிரான்சிஸ் வில்லிஸ் எனும் ஆங்கிலேயர் தான் சரித்திரத்தில் முதன்முதலாக 'திராவிடம்'என்கிற சொல்லை பயன்படுத்தினார். தென்னிந்திய மொழிகள் ஒரு தனிக் குடும்பம் என்றும் ,அவைகளை குறிக்க 'திராவிட மொழிகள் 'என்ற பதத்தையும் தவறுதலாக பயன்படுத்தினார் .அன்று அவர் 'திராவிட மொழி குடும்பம் 'என்ற சொல்லுக்கு பதில் ,சரியான பதமாக 'தமிழ் மொழி குடும்பம் 'என்று சொல்லியிருந்தால் ,இன்று இவ்வளவு குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை .
பலர் கால்டுவெல் தான் முதலில் இந்த'திராவிடம் 'என்ற சொல்லை பயன்படுத்தினர் என் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் . கால்டுவெல் இந்தியா வந்ததே 1838 ல் தான் . அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று எழுதியது இதன் பின்னால் 1856 ல் தான்.அதாவது ,பிரான்சிஸ் வில்லிஸ் இறந்து 37 வருடங்களுக்கு பின்னர் தான் இந்த நூல் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்க .மேலும் ,அவர் நூலின் முன்னுரையில் 'திராவிடம் 'என்ற சொல்லை பிரான்சிஸ் வில்லிஸ் இடமிருந்து தான் எடுத்தேன் எனவும் சொல்லியிருக்கிறார் .
ஆக , முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியது பிரான்சிஸ் வில்லிஸ் தான் என்பது உறுதியாகிறது. பிரான்சிஸ் வில்லிஸ் தமிழை பற்றி தெரிந்தது ஒன்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் க்கு சென்று சேரவில்லை .இதற்கிடையே சர் வில்லியம் ஜோன்ஸ் அவருடைய தவறான கருத்துக்களை உலகின் அறிவு தலைநகராக இருந்த லண்டன் வழியாக ஐரோப்பா முழுவதும் பரப்பினார் .ஆதலால் ஐரோப்பா முழுவதும் சம்ஸ்கிருதம் தான் இந்திய மொழிகளில் முதன்மையானது என்றும் ,இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் என்றும் ஒரு தவறான கருத்து விதைக்கப்பட்டு ,அது பெரும் மரமாக இப்போது வளர்ந்து நிற்கிறது . இது ஒரு பெரும் சரித்திர தவறு .
இவ்வாறு திராவிடம் என்ற சொல் ஒரு மொழி சார்ந்த சொல்லாக தான் முதலில் பயன்படுத்தப்பட்டது . பின்னர் தமிழ் நாட்டில் சமூகநீதி இயக்கம் தோன்றியபின் ஈவேரா, அண்ணா இவர்களின் ஈடுபாட்டினால் அந்த இயக்கம் வள ர்ந்தது . அது பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு பெரும் இயக்கமாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது .அந்த இயக்கத்திற்கு 'சுயமரியாதை இயக்கம் ' என்று பெயர் வைக்கப்பட்டது.காலப்போக்கில் அது 'திராவிட இயக்கம்' என்றாகியது .ஆக , முதலில் மொழிசார்ந்த சொல்லாக பயன்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் ஒரு கருத்தாக்கம் சார்ந்த சொல்லாத மாற்றப்பட்டது .அதாவது திராவிடம் என்றால் பிராமணர்களை எதிர்க்கும் ஒரு கொள்கை .ஆகவே திராவிடர்கள் என்றால் பிராமணர்களை எதிர்ப்பவர்கள் என்று பொருள்படும் படியாக இந்த சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இவ்வாறான பயன்பாடு தமிழ்நாட்டில் மாத்திரமே இருந்தது. திராவிடர்கள் என்றால் ஆரியத்தை எதிர்ப்பவர்கள் ,அதாவது பிராமணர்களை, பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் , அவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்கிற ஒரு கோட்பாடு நிலவியது.
இவ்வாறாக பயன்படுத்தப்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் காலப்போக்கில் 'தமிழ் ' என்ற சொல்லை மறைக்க பயன்படும் ஒரு மாற்று சொல்லாக மாற ஆரம்பித்தது .எங்கெல்லாம் ' தமிழ்' என்று சொல்ல வேண்டியிருக்கிறதோ , அங்கெல்லாம் 'திராவிடம்' என்று சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .காலப்போக்கில் தமிழ் என்ற சொல் எங்குமே வராமல் ,திராவிடம் என்ற சொல் அதற்குப் பதில் வந்து ஆக்கிரமிக்க ஆரம்பித்தது .எடுத்துக்காட்டாக 'முருகன் ஒரு தமிழ் கடவுள் 'என்பதை 'முருகன் ஒரு திராவிடக் கடவுள் ' என்று சொன்னார்கள் . இதை குறித்த முழு ஆய்விற்கு திராவிடம் எனும் பெரும் சூழ்ச்சி எனும் பதிவை படிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு : இது ஒரு ஆய்வுக்கட்டுரை .இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல .