இதற்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள , Linguistics எனப்படும் ’மொழியியல் ‘ என்ற பாடத்துறை எந்நேரத்தில் ,எவ்வாறு உருவானது என்பதை அறிவது அவசியமாகிறது .பண்டைய காலத்தில் பல மொழிகள் வழக்கிலிருந்தும் ‘மொழியியல் ‘என்ற ஒரு தனி பாடத்துறை இருந்ததில்லை .தொழில் புரட்சி காலத்திற்கு பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மேலூன்றி ,16 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் உலகெங்கும் அது பரவ ஆரம்பித்தது .பல வேறு மொழி பேசும் தேசங்கள் ,ஆங்கிலம் பேசும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வரத் தொடங்கின .ஆள்பவர் மொழி ஒன்று ,ஆளப்படுபவர் மொழி வேறு ஒன்றோ /பலவோ என்ற நிலை வந்தவுடன்,ஒரு சுவையான முரண்பாடு தலை தூக்க ஆரம்பித்தது .
எடுத்து காட்டாக ஆங்கிலேயர் அரசனாகவும் தமிழர் அடிமையாகவும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .இங்கே அடிமை பேசும் மொழி தமிழ், ஆங்கிலத்தை விட பன்மடங்கு உயர்ந்தது என்ற உண்மை அரசருக்கு ஒரு உறுத்தலாக மாறும் .ஆக ,ஆட்சியாளர் தம்மைப் போல், தாம் பேசும் மொழியும் ஒரு எஜமான மொழி என்பதை வலியுறுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்தது .இதற்காக அவர்களுக்கு ஒரு அரசியல் கருவி தேவைப்பட்டது .ஆகவே ,ஆங்கிலேயர் ஆளப்படும் மக்களை விட மொழியிலும் உயர்ந்தவர் என்று காட்ட ‘மொழியியல் ‘என்று பாடத்துறையை உருவாக்கினர் .இதன் மூலம் பல கற்பனை கருத்துக்களை மேடை வழியாகவும் ,பாடங்கள் மூலமாகவும் பரப்ப தொடங்கினர் .இந்தியா என்றவுடன் தமிழ் என்ற மொழியின் உன்னதத்தை யாராலும் மறைக்கவோ /மறுக்கவோ முடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் நிலவியது .இந்த நிலையை மாற்ற ,இந்தியாவில் 2 தனி மொழிக்குடும்பங்கள் இருந்ததாக ஒரு கோட்பாடு ஆட்சியாளர்கள் புனைந்தனர் .அதில் ஒன்று ,சமஸ்கிருதம்,ஆங்கிலம் அடங்கிய இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பம் என்றும் ,இன்னொன்று தமிழ் அடங்கிய திராவிட மொழிக்குடும்பம் என்றும் மொழிந்தனர் .இந்த பகுப்பு ,உண்மைகளின் அடிப்படையில் எழுந்ததல்ல .தமிழ் மொழி இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கு தகுதியானதா என்பது ஆராயப்படவே இல்லை .தமிழ் சொற்கள் பல கிரேக்க சொற்களுடன் ஒத்துப்போவதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை .
இந்த பகுப்பினால் சமஸ்கிருதமும் ,தமிழும் எதிர் எதிரான பக்கத்திற்கு மாறியது .சமஸ்கிருதம் தமிழின் இன்னொரு மர்ம முகமே என்ற மாபெரும் உண்மையை மறைத்து ,தமிழை ஒரு கீழான அடிமை மொழியாகவும் ,சமஸ்கிருதத்தை கிரேக்கம் ,ஆங்கிலம் இவைகளின் உறவு மொழியானதால், அரச மொழியாகவும் ஒரே சொடக்கில் மாற்றினார்கள் அவர்கள் ! இந்த புனைந்துரையை உலகெங்கும் பரப்பி எல்லோரையும் நம்ப செய்தனர் .உலகப் புகழ் பெற்ற ஆர்வர்ட் பல்கலைக்கழகம் கூட இந்த பரப்புரையில் ஒரு பங்காற்றியது .
ஆங்கிலேயர் உலகெங்கும் எளிதாய் ஆள ,ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற இந்த பரப்புரை உதவியது .அதன் உதவியாக ,தமிழின் மேன்மை ,தொன்மை ,எல்லா மொழிகளுக்கும் தாய்மை போன்ற உண்மைகளை ,அரசியல் ஆதாயத்திற்க்காக ஆட்சியாளர்கள் மறுக்க ஆரம்பித்தனர் ‘மொழியியல் ‘துறையினர் .தெளிவாய் தெரியும் உண்மைகளை எல்லாம் மறுக்க ஆரம்பித்தனர் .(எ .கா )
- ஆங்கிலம் ‘மேன் ‘—-தமிழ் ‘மனிதன் ‘ .Man -Manithan நேரடி பொருத்தம் இருந்தும் மறுக்கப்பட்டது .
- ஆனால் ,பொருத்தமே இல்லாத ஆங்கிலம் ‘மேன் ‘—சமஸ்கிருதம் ‘நரன் ‘ ,மொழியியலில் பொருத்தமாய் ஒப்புக்கொள்ளப்பட்டது!.இந்த ஜோடியில் தொனி வேறுபாடு தெளிவாய் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது .
தமிழர்கள் என்றாலே ,
- மொழி வெறியர்கள்
- இன பற்றாளர்கள்
- கதை அளப்பார்கள்
- கற்பனையாக சொல்வார்கள்
- தமிழ் ஒரு திராவிட மொழி ,அதனால் அதற்கும் இந்தோ யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை .
இவ்வாறாக அரசியல் சார்ந்த மொழி அறிஞர்கள் ,அவர்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான /முரணான கருத்துக்கள் எதுவும் வராமல் கண்ணாக பார்த்துக்கொள்கிறார்கள் .அதற்காக ,ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் ‘peer review ‘ என்ற இன்னொரு ஆராய்ச்சியாளர் ஒப்புடன் தான் பதிவிடலாம் என்ற முறை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஆக்ஸ் போர்ட் போன்ற பெரும் மொழியியல் பதிப்பகங்கள் ,தமிழை உயர்த்தி புத்தகம் என்றாலே ஏதாவது ஒரு காரணம் கூறி பதிக்க மறுத்துவிடுகிறார்கள் .
ஆனால் ,இந்த அரசியல் எதிலும் சாராத ஒரு தூய மொழியிலாளர் குழுவும் இல்லலாமலில்லை .இவர்கள் தாம் அவ்வப்போது தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் .கீழ்க்கண்டவர்கள் போன்றவர்கள் இதில் அடங்கும் .
- ஜார்ஜ் எல் .ஹார்ட்
- நோம் சோம்க்ஸ்சி
- காட்சும டாய்
- சூடோமோ காம்பே
- பேரா .ஓனூ
- சம்ஸ்கிருத மொழி மட்டும் இனமே இல்லாமல் தன்னாலே தோன்றியது .எந்த மொழியும் தோன்ற ஒரு இனம் அவசியம் .ஆனால் ,சரித்திரத்தில் சம்ஸ்கிருத இனம் என்று எந்த காலக்கட்டத்திலும் இருந்ததில்லை என்பது உறுதியானாலும் இவர்கள் இந்த நம்பிக்கையில் திளைக்கிறார்கள் .
- மொழி என்றால் அது பேசப்பட /பேசப்பட்டிருக்க வேண்டும் .பேசப்படாதது மொழி என்பதற்கு தகுதி பெறாது .ஆனால் ,இவர்கள் சரித்திரத்தில் எப்போதுமே பேசப்படாத சமஸ்கிருத்தை மொழியாக நம்புகிறார்கள் .
- அப்படி பேசப்படாத ஒன்று ,பேசப்படும் மொழிகளுக்கு எப்படி தாயாக முடியும் ?ஆனால் ,இவர்கள் பேசப்படாத சமஸ்கிருதம் பேசப்படும் ஆங்கிலம் ,இந்தி போன்ற மொழிகளுக்கு தாய் என நம்புகிறார்கள் .இது ,பேசப்படாத ஜாவா கணினி மொழியிலிருந்து ,பேசப்படும் ஆங்கிலம் வந்தது என்பதற்கு சமமாகும் .
- எந்த ஒரு மொழியும் ,ஒரு காலத்திற்கு பேசப்பட்டபின் தான் அதற்கு எழுத்து வடிவம் உருவாகும் .ஆனால் ,பேசவே படாத ‘தேவநாகரி ‘என்ற மொழிக்கு எழுத்து வடிவம் (Script )மட்டும் உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் .அந்த ‘தேவநாகரி ‘எழுத்து தான் சமஸ்கிருதத்திற்கும் ,இந்திக்கும் பயன் படுகிறதாம் !
2003 ல் பன்னாட்டு மொழியியல் பதிப்பான Linguist List என்ற அமெரிக்க ஆங்கில இதழில் ‘பழைய ‘என்ற தமிழ் சொல் தான் ‘Paleo ‘என்ற கிரேக்க சொல்லாகும் என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிரூபித்து பதிவிட்டிருந்தேன் .உடனே பல பெரும் மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ,எடுத்தவுடன் ‘அது அப்படி இருக்க முடியாது ‘என்ற முடிவுடன் தான் தங்கள் மடலை தொடங்கி இருந்தனர் .யாரும் ஆதாரங்களுக்கு எதிர் வாதங்களைக் கூட வைக்கவில்லை .ஆனால் ,எடுத்தவுடன் ’இது இருக்காது/இருக்க முடியாது ‘என்று தான் வாதம் செய்தார்கள் .அதில் ஒரு அமெரிக்கப் பெண் ,என்னை அடிக்காத குறையாய் திட்டி இருந்தார் .உலகப் புகழ் பெற்ற ,மொழியியலின் தந்தை எனப்படும் பேரா .லாரி ட்ராஸ்க் அவர்களும் இதைப் பற்றி சில ஐயங்களை எழுப்பியிருந்தார் .அவர் எழுப்பிய ஐயங்களுக்கு எல்லாம் தகுந்த பதிலை பதிவிட்டு ,என்னுடைய முடிவுரையையும் அதே இதழில் பதிவிட்டிருந்தேன் .என்றாலும் ,வாசித்த யாரும் ஒரு பெரும் கண்டுபிடிப்பைக் கண்ட மனக்கிளர்ச்சியை பதிவிடவில்லை !ஏன் ?
நீர் என்பது 2 கூறு ஹைட்ரஜனும் 1 கூறு ஆக்ஸிஜனும் கொண்டது என்று ஒரு ஆப்பிரிக்க விஞ்ஞானி நிரூபித்தாலும்,இந்திய விஞ்ஞானி சொன்னாலும் , உலகமே கேள்வியின்றி ஒத்துக்கொள்கிறது .ஏனென்றால் ,அதில் அரசியல் கலப்பு இல்லை !ஆப்பிரிக்கர் சொன்னாலும் அமெரிக்கர் சொன்னாலும் அந்த உண்மை நிரூபிக்கப்பட்டதால் உண்மை தான் . ஆனால் ,மொழியியலில் ஒரு தமிழன் ,தமிழ் தான் முதல் மொழி என்று நிரூபித்து ,அதை மற்றவர் ஒத்துக்கொண்டால் ,தமிழர் உயர்ந்தவர் என்பதை ஒத்துக்கொண்டதாக ஆகி விடும் என நினைக்கிறார்கள் .ஆக ,அங்கு அரசியல் தானாகவே தலையிடுகிறது !அதனால் உண்மையை மறுக்கும் /மறைக்கும் நிலை தானாக வருகிறது .