Saturday, 9 December 2017

ஒரு சொல்லின் உரிமை மொழியை எப்படி உறுதி செய்வது ?

வேதாகம ராஜா சாலமன் ஞானத்திற்கு பெயர் பெற்றவன் .தலை சிறந்த ஞானி .அவனிடம் ஒரு முறை ,இரண்டு பெண்கள் ஒரு குழந்தை மேல் உரிமை கொண்டாடி ,நியாயம் கேட்டு வந்தார்கள் .அரசபையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
"அரசே ,இது என் குழந்தை தான்  .குழந்தை பெற்ற மயக்கத்தில் நான் தூங்கும் போது ,இந்த கள்ளி என் குழந்தையை திருடி விட்டாள் !"என்று கதறினாள் வள்ளி என்ற ஒரு பெண் .
"இல்லை அரசே !இவள் பொய் சொல்கிறாள் !இது சத்தியமாக நான் பெற்ற குழந்தை தான் !"என்று அதிகாரமாக வாதிட்டாள் அடுத்தவள் !அவள் பெயர் கள்ளி !
                               ராஜா சாலமன் எப்படி தீர்ப்பு சொல்லப் போகிறான் என்று அரசபை ஆவலோடு காத்திருந்தது .
"இது ஒரு குழப்பமான வழக்காய் உள்ளது .சாட்சி யாருமில்லை .ஆதலால் ,இந்த குழந்தையை பாதியாய் வெட்டி ,ஆளுக்கு பாதி கொடுக்கும் படியாக தீர்ப்பு சொல்கிறேன் !"என்றார் ராஜா சாலமன்!
அரசபையே குழம்பிப் போனது .
"என்ன மடத்தனமான தீர்ப்பு !"என எண்ணினர் அங்கிருந்தோர் .
                                        தீர்ப்பைக் கேட்டவுடன் பதைபதைத்துப் போனாள் முதல் பெண் வள்ளி.
.                                       இரண்டாவது பெண்ணோ மகிழ்ந்து "அரசே !உங்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் !குழந்தையை பாதியாய் வெட்டி விடலாம் "என்றாள் .
                                 முதல் பெண் அழுது கொண்டே "அரசே !வேண்டாம் !பாவம் !!குழந்தையை வெட்ட வேண்டாம் !அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்அவளிடமாவது உயிரோடு வாழட்டும் ! "என்றாள் .
                                   உடனே ,சாலமன் ராஜா "இவள் தான் உண்மையான தாய் !இவளிடமே குழந்தையை கொடுத்து விடுங்கள் !"என்று சொல்லி தன்னுடைய ஞானத்தை நிரூபித்தார் .
                                    இது ஒரு சுவையான கதை தான்  .ஆனால் ,இதே போல் ,தமிழுக்கு சொந்தமான பல சொற்களை வடமொழி தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது              ஒரு பெரும் தொடர்  கதை .
அம்மாதிரி சூழ் நிலைகளில் ,யார் உண்மையான தாய் என்பதை எப்படி உறுதி செய்வது ?
இதோ சாலொமோனின் தீர்ப்பு !
-------------------------------------------------------------------------------------------------------------------------
விதி எண் 1:சொல் தோன்ற மொழி வேண்டும் ;மொழி தோன்ற இனம் வேண்டும் !
ஒரு மொழி தோன்ற வேண்டுமென்றால் ,கட்டாயம் அதன் பின்னால் இனம் ஒன்று இருக்க வேண்டும் .
எடுத்துக்காட்டாக ,ஆங்கிலேய இனம் இருப்பதால் ஆங்கிலம் தோன்றியது .சீன இனம் இருப்பதால் சீன மொழி தோன்றியது .
விக்கியின் 15 அதிகம் பேசப்படும் உலக மொழிகள் பட்டியல்  இதோ :
இதில் எல்லா மொழிகளுக்கும் ஒரு மக்கள் இருப்பதைக் காணலாம் .இதில் 13 வதாக 'உ 'என்று ஒரு மொழி உள்ளது .இதுவும் சீனர்களின் ஒரு பிரிவினரின் மொழியாகும் .ஆக ,இனமில்லாமல் மொழி பிறக்கமுடியாது என்பது உறுதி .
                                     இப்படியிருக்க ,சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாக கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?அப்படி ஒரு மொழி இருந்திருந்தால் ,எந்த இன மக்கள் அதைப் பேசினார்கள் என்ற கேள்வி எழுகிறது .'சமஸ்கிருதர்கள் 'என்று ஒரு இனம் எப்போதாவது இருந்ததா ?இல்லை ! எக்காலத்திலும் சரித்திரத்தில் அப்படி ஒரு இனம்  இருந்ததில்லை .
               'சமஸ்கிருதம் 'என்ற சொல்லே தமிழ் தான் .'சமம்+கிறுக்கம் =சமஸ்கிருதம்'.அதாவது 'சமம் செய்யப்பட்ட எழுத்துக்கள் 'என்று அது பொருள் படும் .
ஆக ,சமஸ்கிருதம் என்று ஒரு பேச்சு மொழி ஒன்று  ,இனமில்லாமல் தோன்றியிருக்க முடியாது .அப்படி ஒரு மொழி தோன்றாமல் ,அதில் சொற்கள் தோன்ற முடியாது என்பது திண்ணம் .
அப்படியென்றால் சமஸ்கிருதம் என்கிற மொழியே இருந்ததில்லையா ?
                           சமஸ்கிருதம் என்ற மொழி சில தேவைகளுக்காக எழுத்து வடிவில் மட்டும் உருவானது .எடுத்துக்காட்டாக ,கணிப்பொறி மொழியாகிய ஜாவா போன்றவற்றை சொல்லலாம் .இம்மொழிகளை குறியீடாக எழுதலாம் ,ஆனால் ,பேச முடியாது .இம்மொழிகளால்  சொற்களை எப்போதும் பிறப்பிக்க முடியாது -------------------------------------------------------------------------------------------------------------------------
விதி எண்  2:சொல் தோன்ற அதற்கு ஏற்ற சூழ் நிலை(eco-system) அவசியம் தேவை .
ஒரு குறிப்பிட்ட சொல் ,குறிப்பிட்ட மொழியில் தோன்ற வேண்டுமென்றால் ,கீழ்க் கண்ட சூழ்நிலை அவசியம் தேவை .
எடுத்துக் காட்டாக 'யானை 'என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .இது தமிழ்ச் சொல் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?
  1. தமிழர் என்று ஒரு மக்கள் உண்டு .
  2. அவர்கள் தமிழ் என்று ஒரு மொழி பேசுவர் .
  3. அவர்களுக்கு ஒரு நிலம்  உண்டு .
  4. அந்த நிலத்தில் 'யானை 'என்ற விலங்கு உண்டு .
  5. அந்த விலங்கிற்கு 'யானை 'என்று தமிழில் பெயரிட்டனர் .
                              இப்போது ,இந்த சொல்லை 'சமஸ்கிருதம்' என்று சிலர் உரிமை கோருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .நாம் அவர்களிடம் ,மேற்கண்ட 5 கேள்விகளை கேட்க வேண்டும் .
அவர்கள் பதில் எப்படி இருக்கும் ?
கேள்வி  1--'சமஸ்கிருதர்கள் என்ற மக்கள் இருந்தது இல்லை .பின்னர் யார் பெயரிட முடியும் ?
கேள்வி  2--மக்களே இல்லாத போது மொழி யார் பேசுவார் ?
கேள்வி  3--மக்களே இல்லாத போது நாடு எப்படி இருக்கும் ?
கேள்வி  4-- நிலம்  இல்லாத போது விலங்கு எப்படி வரும் ?
கேள்வி  5--'சமஸ்கிருதர்கள் என்ற மக்கள் இருந்தது இல்லை .பின்னர் யார் பெயரிட முடியும் ?
ஆக ,போலியான உரிமை கோருதலை இந்த 5 கேள்விகளைக் கொண்டு எளிதில் நிருபிக்கலாம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------விதி எண் 3:சொல்லின் உறவுச் சொற்கள் இருக்கும் மொழி தான் உரிமை மொழி .
ஒரு சொல்லை சொந்தம் கொண்டாடும் மொழியில் ,அந்த சொல்லின் உறவுச் சொற்களும் இருக்கும் .எடுத்துக்காட்டாக ,தமிழில் இருக்கும் ஒரு சொல் 'பழைய '.இதே சொல் கிரேக்கத்தில் ,இதே பொருளில் உள்ளது .அங்கு அது 'பலய 'என்று இருக்கிறது .கிரேக்கத்தில் தமிழ் சிறப்பு எழுத்தான 'ழ 'இல்லை .
கேள்வி ,இது தமிழ்ச் சொல்லா அல்லது கிரேக்கச் சொல்லா ?
இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது எப்படி ? என் குடும்பத்தை சார்ந்த எல்லோருக்கும் ஒரு சாயல் இருக்கும் .அது போல சொற்களுக்கும் உறவுகளுக்கும்  ,சாயல்களும் இருக்கும் .எப்படி ?
'பழைய ' தமிழ் சொல்லின் உறவினர்கள் :
  1. பழசு 
  2. அதன் எதிர் சொல் -புதுசு 
அன்றாடம் பயன் படும் 'பழைய சோறு ;பழைய துணி ;'பழைய சரக்கு ....போன்றவை .
'பழைய 'என்பது 'பழு ,பழம் ,பழுத்த >'பழைய ' என்ற சொல்லாக்கம் தமிழில் பெறுகிறது .ஆக ,'பழைய 'என்ற சொல்லின் வேரும் தமிழில் உள்ளது .
கிரேக்கத்தில்  'பலய 'என்ற சொல்லுக்கு உறவுச் சொற்கள் இல்லை .அந்த சொல் ஒரு தனி மரமாக நிற்கிறது .அதன் எதிர் சொல் 'புதுசு ' என்பதும் கிரேக்கத்தில் இல்லை .
ஆக ,தமிழுக்கும் ,கிரேக்கத்திற்கும் இந்த சொல்லைக் குறித்த மரபணு சோதனை செய்தால் ,தமிழ் தான் தாய் என்பது சந்தேகமின்றி நிருபணம் ஆகும் .
மொத்தத்தில் ....
                                         உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த தமிழ் மொழியே ,பிற மொழிகளிலிருந்து சொல் கடன் வாங்கியிருந்தால் அதை ஒத்து கொள்ளும் பெருந் தன்மை கொண்டது .எடுத்துக்காட்டாக 'இனாம் 'என்ற சொல் தமிழில் பயன் படுத்தப்படுகிறது .இது அரபிச்  சொல் என்பதை தமிழ் ஒத்து கொள்கிறது .இந்த சொல் தமிழ் தான் என்று உரிமை கூறுவதில்லை .ஆனால் ,சமஸ்கிருதம் அப்படியல்ல,ஒரு சொல்  .தமிழ் சொல் தான் என்று தெளிவாக இருந்தாலும் ,அதையும் சமஸ்கிருதம் தான் என்று முரண்டு பிடிக்கும் .எடுத்துக்காட்டாக,'மலை 'என்ற தமிழ் சொல்லையும் தன்னுடையது என்று சொல்லும் !
இந்த நிலையில் ,மேற்கண்ட 3 விதிகள் உண்மையை நிறுவ உதவும் .
                        இந்த விதிகள் படி ,கீழ்க்கண்ட சொற்கள் தமிழ் தான் என்பது உறுதியாகிறது .
  • பூஜா 
  • ஜலம் 
  • வேதா 
  • யோகா 
  • ஹோமம் 
  • சுந்தர் 
  • வெங்கடேஸ்வரன் 
  • இன்னும் பல 
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு மிக முக்கியமான ஒன்று .ஆதலால் ,10 பேருக்காவது பகிரவும் .நன்றி .
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு மின்னல் வேகத்தில் பகிரப்படுவது மகிழ்ச்சியை தருகிறது .6 நாட்களில்  820 பார்வைகள் பெற்று 1000 த்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பலர் கவனத்தை ஈர்த்திருக்கிறது .இந்த ஆராய்ச்சியின் முழு விபரங்கள் அறிய  Proto-Indo-European Language--

FACE UNVEILED ! என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும் .இந்த பதிவு வாசகர்களுக்கு மட்டும் 75% விலை குறைப்பில் அது கிடைக்கும் .

 NOTION PRESS   என்ற வலைத்தளத்தில் சென்று  COUPON CODE -LOVEGIFT  என்று போட்டு வாங்கவும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------