Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Wednesday, 30 June 2021

Which language is the mother of Sanskrit ?



Surprisingly,there’s no subject called ’Motherology’in Linguistics that would help us trace the mother of any language!Nevertheless,some linguists have recently formed certain ground rules to identify the mother language of any language in question.

’CDDT’ (Core Diction Deduction Technique) lists out a few ground rules for the purpose.

What are the rules?

1.The fore most deciding rule is the presence of common core words between the ‘mother’ and the ’daughter’ languages discussed.List of ’Core diction’ is furnished elsewhere.

2. The chronological precedence of the ‘mother language’ needs to be established beyond reasonable doubt.

3. The ‘mother language’in question should have identifiable lot of ’native speakers’ to prove independent origination and spoken status as of now.

What are the core words/core diction for the exercise?

When any language ‘originates’the first words to originate are all ‘verbs’ normally.For example, core verbs like’come,go,sit,eat’ etc originate first followed by core nouns like’food,water,mom,dad,brother,sister’etc.’.

Linguists are of the view that a language is original if at least 90% of the following core diction A is proved to be original,meaning its ’own’.The view is based on the understanding that ‘verbs’ are the drivers of spoken basics and no language can originate without its own verbs.’Nouns’ may be borrowed from any language from any where.

A-Core Verbs

1. Go

2. Come

3. Run

4. Sit

5. Eat

6. Pee

7.Shit

8. Stand

9. Lie

10. Sleep

11. Bath

12. Drink

13. Fuck

B- Core Nouns

14. Man(Person)

15. Woman(Female)

16. Mom

17. Dad

18. Wife(my woman)

19. Food

20.Water

21. Brother

22. Sister

23. Hot

24. Cold

25. Fire

26. Good

27. Bad

28. God

29. Fear

30. Sad

31. Dog

32. Cow/Bull

33. Animal

34. Cave/Home

35.Tree

36. River

37. Forest

38. Etc.

(This is a sample list only for illustrating the concept)

However,if 90% of the core diction of Daughter language D is derived from another chronologically older mother language M,then it can be safely concluded that the second language M is the ‘Mother language’ of the first language D.

An illustration would help understand the CDD Technique better.

Let’s take a simple set of languages for easy understanding,say Tamil and Malayalam.

A-Core Verbs -TAMIL (Mother) MALAYALAM(Daughter)

1. Go ————-Po———————- Poaku

2. Come ——— Vaa——————- Varuka

3.Run ———— Odu—————— Oduka

4 Sit —————Iru ——————-Irukkuka

5. Eat ————- Unnu —————-Bhakshikkuga(Tamil-Patchi=consume)

6.Pee———— Onnukku ———— Pi(Tamil for shit)

7. Shit ————- Kakka————— Sirr ?

8. Stand———- Nil ——————- Nikku

9. Lie —————- Padu ————— Kitakkuka(Tamil-Kida=lie down)

10. Sleep(v)——— Urangu ———- Urakka

11.Bath(v) ————Kuli ————- Kulikku

12. Drink ———— Kudi————- Kudikku

13. Fuck———— Okka ————- Umpi(Tamil-Oombu=suck)

Almost 95% matching is seen in this study.Some words may not match exactly as another equivalent word of M language may be used in D language, like for ‘eat’.Sometimes phonetic changes in D words may disguise the words from immediate recognition .

Most of the words in B List Core Nouns are also likely to match thus strengthening the relationship.However B List words are prone to undergo more changes with time and varied cultural contacts..So B List matching may be considered as supplementary/additional/extra proof only.

I suggest this kind of an exercise with Sanskrit as M and Hindi as D for some surprising revealing insights.

Can we find out the mother of Sanskrit by applying CDDT ?

The CDD Technique works good as long as both the languages discussed are SPOKEN languages driven by verbs.If one of them is an unspoken SCRIPT ,then these rules do not apply.Since some IE linguists have recently found out that Sanskrit is a CODE and not a ‘language’ by nature,we cannot apply CDDT to determine who the mother is.

Instead of it,we can compare all key WORDS/NOUNS in (M and D )to determine who the mother is.

Who could be the most probable mother of Sanskrit?The first choice of the IE scholars is PIE or Greek.PIE is dated circa 4500 B.C.while Sanskrit is dated circa 450 B.C. well separated by 4050 long years So,PIE as a possible candidate is ruled out as anachronistic issue .

When the Aryans entered India by say circa 1500 B.C. they did not bring with them any known language.If Greek was the mother of Sanskrit,then they should have spoken Sanskrit before entering India.The very fact that Sanskrit was born in India means that its mother is somewhere in India only.

Now,who is that secret mother of Sanskrit ?

The possible candidate for the winner mother should be:

1. Older than Sanskrit

2.Should have the concepts/ideas that are in Sanskrit

3. Should be an Indian language spoken in close proximity to Sanskrit

Considering the fore-going parameters,Tamil appears to be the ideal candidate for the M language..Let’s compare key Sanskrit words with Tamil equivalents now.

No- Sanskrit - Tamil Root.

1 Veda———— Vithu=Seed,Vithuvan=Expert

2 Puja —————Poo(flower)+Seithu(do)

3 Gyan ————— Gnanam=Knowledge,wisdom

4 Samskrit———— Samam=Level+Kirukku=Scribble,Script

5 Atma—————— Aal=Person

6 Yoga—————— Okkam=Union

7 Ayurveda———— Ayul=life+Veda=vithu

Many more such words are available but I stop with this few samples for want of space.

In the circumstances,some IE linguists conclude that Tamil is the mother of Sanskrit in its present form based on the dictional and thought similarities.This contention is supported by the fact that there are no native community of speakers for Sanskrit who could originate words for the Sanskrit language It may also be observed that the supporters of Sanskrit language themselves speak the respective State languages only as their mother tongue.

 Link:https://www.quora.com/Which-is-the-mother-of-Sanskrit-language/answer/Alvaro-Hans?__filter__=&__nsrc__=2&__snid3__=3321603133


-------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, 10 May 2021

திராவிடம் என்ற சொல்லின் வரலாறு

                                         

    
                 இந்திய  சரித்திரத்தின்  படி  ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 1639 ல்  வந்து இறங்கினார்கள் .ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே அவர்கள் அன்று மெட்ராஸ் எனும் தென்னிந்திய ஒரு கடற்கரையில் கால்பதித்தார்.அப்போது  ஆங்கிலேயர்கள் 400 வருட   நீண்ட  ஆட்சி இந்தியாவில் செய்யப்  போகிறார்கள் என்று அன்று அவர் கிஞ்சித்தும் நினைத்திருக்க வாய்ப்பில்லை . 
                                        அவர் இறங்கியது மெட்ராஸ் ஆக இருந்தாலும்,காலப்போக்கில்  கல்கத்தா ,அதாவது தற்போதைய கொல்கொத்தா,தான் பிரிட்டிஷ்  சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாறியது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியாவில் அமைக்க இந்தியாவில் அப்போது மேல்தட்டு மக்களாக இருந்த தென்னிந்திய பிராமணர்களை தங்களுடைய அலுவலக வேலைகளுக்கு அமர்த்திக் கொண்டார்கள். வேலைக்காக கல்கத்தா சென்ற தமிழ் பிராமணர்கள் அப்போது கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் ஆங்கிலேயரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதியாக இருந்தாலும் , மொழிகளில் ஒரு தனி  ஆர்வம்  கொண்டவராக இருந்தார் .ஆதலால்  இந்திய மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார் .இந்த வாய்ப்பை ,நல்வாய்ப்பாய்  பயன்படுத்தி அவரிடம் நெருக்கமாக இருந்த தமிழ் பிராமணர்கள் இந்தியாவின் பூர்வ மொழி சமஸ்கிருதம்தான் என்றும் சமஸ்கிருத பண்பாடு தான் இந்தியாவின்  அடிப்படை பண்பாடு என்றும்  தவறாக சொல்லி நம்ப வைத்து விட்டார்கள் .தமிழ் என்று ஒரு தொன்மையான மொழி ஒன்று இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் சொல்லவில்லை .சர் வில்லியம் ஜோன்ஸ், கிரேக்கம், லத்தின் போன்ற  ஐரோப்பிய மொழிகளை அறிந்திருந்தார் .அவர் பார்வையில் பல சொற்கள் சம்ஸ்கிருதத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் பொதுவாக காணப்பட்டது .ஆதலால் அவர் சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றுதான் அல்லது சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பிறவி  தொடர்பு உள்ளது என்ற ஒரு தவறான கருத்துக்கு வந்திருந்தார் . ஆதலால் அவர்  சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகள் இவையெல்லாவற்றையும் ஒரு குடும்பம் ஆக்கி அதை இந்தோ ஐரோப்பிய  மொழிக் குடும்பம் என்று பெயரிட்டார் . சர் வில்லியம் ஜோன்ஸ், அவர் உண்மை என்று நம்பிய இந்த தவறான  கருத்துகளை ஐரோப்பா முழுவதும் ,ஆசியாட்டிக் சொசைட்டி   என்ற ஒரு அமைப்பை  1786 ல்  நிறுவி  பரப்புரை செய்தார் .
                                                இந்திய மண்ணில் தோன்றிய   மொழியான தமிழைப் பற்றி சர் வில்லியம் ஜோன்ஸ்க்கு ஒன்றுமே தெரியவில்லை. காரணம் அதைப்பற்றி அவருக்கு யாரும் சொல்லவில்லை .ஆதலால் அவர் அவருடன் நெருக்கமாக இருந்த தமிழ்  பிராமணர்கள் சொன்ன  சம்ஸ்கிருதம் பற்றிய கருத்துக்களை முற்றிலும் நம்பி விட்டார். 
                                        அதே சமயம் தென்னிந்தியாவின் மெட்ராசில்  பிரான்சிஸ் ஒயிட் வில்லிஸ்(1777-1819) என்ற  ஆங்கிலேயர்  கலெக்டராக வேலை பார்த்தார் . அவருக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது .அவர், தமிழ்,  மண்ணின் மொழி, அதற்கு 44 கிளை  மொழிகள் உள்ளன ,அவைகளை தென் இந்தியர்கள் பேசுகிறார்கள் .ஆனால் சம்ஸ்கிருதத்தை யாரும் பேசுவதில்லை .சம்ஸ்கிருதத்தை கோயில்களில் பஜனை செய்வதற்கும் , பூஜை செய்வதற்கும் மட்டும்தான்  பயன்படுத்துகிறார்கள் , என்பதை  எல்லாம் அறிந்திருந்தார் .ஆதலால் பிரான்சிஸ் வில்லிஸ் ,சர் வில்லியம் ஜோன்ஸ்  அவர்களின் மொழியறிவு தவறான தகவலால் பாதிக்கப்பட்டதையும்  அறிந்திருந்தார் .
                                 இந்த பிரான்சிஸ்  வில்லிஸ் எனும் ஆங்கிலேயர் தான்  சரித்திரத்தில் முதன்முதலாக 'திராவிடம்'என்கிற சொல்லை  பயன்படுத்தினார். தென்னிந்திய மொழிகள் ஒரு தனிக் குடும்பம் என்றும் ,அவைகளை குறிக்க 'திராவிட மொழிகள் 'என்ற பதத்தையும் தவறுதலாக பயன்படுத்தினார் .அன்று அவர் 'திராவிட  மொழி குடும்பம்  'என்ற சொல்லுக்கு பதில் ,சரியான பதமாக 'தமிழ் மொழி குடும்பம் 'என்று சொல்லியிருந்தால் ,இன்று இவ்வளவு குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை .
                                 பலர் கால்டுவெல் தான் முதலில் இந்த'திராவிடம் 'என்ற  சொல்லை பயன்படுத்தினர் என் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் . கால்டுவெல் இந்தியா வந்ததே 1838 ல் தான் . அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று எழுதியது இதன் பின்னால் 1856 ல்  தான்.அதாவது ,பிரான்சிஸ் வில்லிஸ் இறந்து 37 வருடங்களுக்கு பின்னர் தான் இந்த நூல் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்க .மேலும் ,அவர் நூலின் முன்னுரையில் 'திராவிடம் 'என்ற சொல்லை பிரான்சிஸ் வில்லிஸ்  இடமிருந்து தான் எடுத்தேன் எனவும்  சொல்லியிருக்கிறார் .
                 ஆக , முதலில் திராவிடம்  என்ற சொல்லை பயன்படுத்தியது பிரான்சிஸ் வில்லிஸ்  தான் என்பது உறுதியாகிறது. பிரான்சிஸ் வில்லிஸ் தமிழை பற்றி தெரிந்தது ஒன்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் க்கு சென்று சேரவில்லை .இதற்கிடையே சர் வில்லியம் ஜோன்ஸ் அவருடைய தவறான கருத்துக்களை உலகின் அறிவு தலைநகராக இருந்த லண்டன் வழியாக ஐரோப்பா முழுவதும் பரப்பினார் .ஆதலால் ஐரோப்பா முழுவதும் சம்ஸ்கிருதம் தான் இந்திய மொழிகளில் முதன்மையானது என்றும்  ,இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் என்றும்  ஒரு தவறான கருத்து விதைக்கப்பட்டு ,அது பெரும் மரமாக இப்போது வளர்ந்து நிற்கிறது . இது ஒரு பெரும் சரித்திர தவறு .
                                              இவ்வாறு திராவிடம் என்ற சொல் ஒரு மொழி சார்ந்த சொல்லாக தான் முதலில் பயன்படுத்தப்பட்டது . பின்னர் தமிழ்  நாட்டில் சமூகநீதி இயக்கம் தோன்றியபின் ஈவேரா, அண்ணா இவர்களின் ஈடுபாட்டினால் அந்த இயக்கம் வள ர்ந்தது . அது பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும்  ஒரு பெரும் இயக்கமாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது .அந்த இயக்கத்திற்கு 'சுயமரியாதை இயக்கம் '  என்று பெயர் வைக்கப்பட்டது.காலப்போக்கில்  அது 'திராவிட இயக்கம்' என்றாகியது .ஆக , முதலில் மொழிசார்ந்த சொல்லாக பயன்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் ஒரு கருத்தாக்கம் சார்ந்த சொல்லாத மாற்றப்பட்டது .அதாவது திராவிடம் என்றால் பிராமணர்களை எதிர்க்கும் ஒரு கொள்கை .ஆகவே திராவிடர்கள் என்றால் பிராமணர்களை எதிர்ப்பவர்கள் என்று பொருள்படும் படியாக இந்த சொல்லை  பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இவ்வாறான  பயன்பாடு தமிழ்நாட்டில் மாத்திரமே இருந்தது. திராவிடர்கள் என்றால் ஆரியத்தை எதிர்ப்பவர்கள் ,அதாவது பிராமணர்களை, பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் , அவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்  தான் இருக்கிறார்கள் என்கிற ஒரு கோட்பாடு நிலவியது.
                                                     இவ்வாறாக பயன்படுத்தப்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் காலப்போக்கில் 'தமிழ் ' என்ற சொல்லை மறைக்க பயன்படும் ஒரு மாற்று சொல்லாக  மாற ஆரம்பித்தது .எங்கெல்லாம் ' தமிழ்' என்று  சொல்ல வேண்டியிருக்கிறதோ , அங்கெல்லாம் 'திராவிடம்' என்று சொல்லை  பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .காலப்போக்கில் தமிழ் என்ற சொல் எங்குமே வராமல் ,திராவிடம் என்ற சொல் அதற்குப் பதில் வந்து ஆக்கிரமிக்க  ஆரம்பித்தது .எடுத்துக்காட்டாக 'முருகன் ஒரு தமிழ் கடவுள் 'என்பதை 'முருகன் ஒரு திராவிடக்  கடவுள் ' என்று சொன்னார்கள் . இதை குறித்த முழு ஆய்விற்கு திராவிடம் எனும் பெரும் சூழ்ச்சி  எனும்  பதிவை படிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு : இது ஒரு ஆய்வுக்கட்டுரை .இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல .

Tuesday, 5 March 2019

தமிழ் மிகவும் பழமைவாய்ந்த மொழி என்று கூறுவது பலரால் மறுக்கப்படுவது ஏன்?

இதற்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள , Linguistics எனப்படும் ’மொழியியல் ‘ என்ற பாடத்துறை எந்நேரத்தில் ,எவ்வாறு உருவானது என்பதை அறிவது அவசியமாகிறது .பண்டைய காலத்தில் பல மொழிகள் வழக்கிலிருந்தும் ‘மொழியியல் ‘என்ற ஒரு தனி பாடத்துறை இருந்ததில்லை .தொழில் புரட்சி காலத்திற்கு பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மேலூன்றி ,16 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் உலகெங்கும் அது பரவ ஆரம்பித்தது .பல வேறு மொழி பேசும் தேசங்கள் ,ஆங்கிலம் பேசும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வரத் தொடங்கின .ஆள்பவர் மொழி ஒன்று ,ஆளப்படுபவர் மொழி வேறு ஒன்றோ /பலவோ என்ற நிலை வந்தவுடன்,ஒரு சுவையான முரண்பாடு தலை தூக்க ஆரம்பித்தது .
எடுத்து காட்டாக ஆங்கிலேயர் அரசனாகவும் தமிழர் அடிமையாகவும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .இங்கே அடிமை பேசும் மொழி தமிழ், ஆங்கிலத்தை விட பன்மடங்கு உயர்ந்தது என்ற உண்மை அரசருக்கு ஒரு உறுத்தலாக மாறும் .ஆக ,ஆட்சியாளர் தம்மைப் போல், தாம் பேசும் மொழியும் ஒரு எஜமான மொழி என்பதை வலியுறுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்தது .இதற்காக அவர்களுக்கு ஒரு அரசியல் கருவி தேவைப்பட்டது .ஆகவே ,ஆங்கிலேயர் ஆளப்படும் மக்களை விட மொழியிலும் உயர்ந்தவர் என்று காட்ட ‘மொழியியல் ‘என்று பாடத்துறையை உருவாக்கினர் .இதன் மூலம் பல கற்பனை கருத்துக்களை மேடை வழியாகவும் ,பாடங்கள் மூலமாகவும் பரப்ப தொடங்கினர் .
இந்தியா என்றவுடன் தமிழ் என்ற மொழியின் உன்னதத்தை யாராலும் மறைக்கவோ /மறுக்கவோ முடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் நிலவியது .இந்த நிலையை மாற்ற ,இந்தியாவில் 2 தனி மொழிக்குடும்பங்கள் இருந்ததாக ஒரு கோட்பாடு ஆட்சியாளர்கள் புனைந்தனர் .அதில் ஒன்று ,சமஸ்கிருதம்,ஆங்கிலம் அடங்கிய இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பம் என்றும் ,இன்னொன்று தமிழ் அடங்கிய திராவிட மொழிக்குடும்பம் என்றும் மொழிந்தனர் .இந்த பகுப்பு ,உண்மைகளின் அடிப்படையில் எழுந்ததல்ல .தமிழ் மொழி இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கு தகுதியானதா என்பது ஆராயப்படவே இல்லை .தமிழ் சொற்கள் பல கிரேக்க சொற்களுடன் ஒத்துப்போவதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை .
இந்த பகுப்பினால் சமஸ்கிருதமும் ,தமிழும் எதிர் எதிரான பக்கத்திற்கு மாறியது .சமஸ்கிருதம் தமிழின் இன்னொரு மர்ம முகமே என்ற மாபெரும் உண்மையை மறைத்து ,தமிழை ஒரு கீழான அடிமை மொழியாகவும் ,சமஸ்கிருதத்தை கிரேக்கம் ,ஆங்கிலம் இவைகளின் உறவு மொழியானதால், அரச மொழியாகவும் ஒரே சொடக்கில் மாற்றினார்கள் அவர்கள் ! இந்த புனைந்துரையை உலகெங்கும் பரப்பி எல்லோரையும் நம்ப செய்தனர் .உலகப் புகழ் பெற்ற ஆர்வர்ட் பல்கலைக்கழகம் கூட இந்த பரப்புரையில் ஒரு பங்காற்றியது .
ஆங்கிலேயர் உலகெங்கும் எளிதாய் ஆள ,ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற இந்த பரப்புரை உதவியது .அதன் உதவியாக ,தமிழின் மேன்மை ,தொன்மை ,எல்லா மொழிகளுக்கும் தாய்மை போன்ற உண்மைகளை ,அரசியல் ஆதாயத்திற்க்காக ஆட்சியாளர்கள் மறுக்க ஆரம்பித்தனர் ‘மொழியியல் ‘துறையினர் .தெளிவாய் தெரியும் உண்மைகளை எல்லாம் மறுக்க ஆரம்பித்தனர் .(எ .கா )
  • ஆங்கிலம் ‘மேன் ‘—-தமிழ் ‘மனிதன் ‘ .Man -Manithan நேரடி பொருத்தம் இருந்தும் மறுக்கப்பட்டது .
  • ஆனால் ,பொருத்தமே இல்லாத ஆங்கிலம் ‘மேன் ‘—சமஸ்கிருதம் ‘நரன் ‘ ,மொழியியலில் பொருத்தமாய் ஒப்புக்கொள்ளப்பட்டது!.இந்த ஜோடியில் தொனி வேறுபாடு தெளிவாய் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது .
ஆக ,தமிழின் மேன்மையை,அரசியலுக்காக ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட மொழியியல் பாடத்துறை மறுக்க ஆரம்பித்து ,ஆங்கிலேயரின் உலகளாவிய ஆதிக்கத்தால், எங்கும் அதே நிலை எடுக்கும் பழக்கம் பரவி வேரூன்றி விட்டது .தமிழை பற்றி என்ன சொன்னாலும் ,எந்த ஆதாரம் அளித்தாலும் ,மேற்கத்திய மொழியாளர்கள் வாசித்து பார்க்காமலே ,கிண்டல் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் .
தமிழர்கள் என்றாலே ,
  • மொழி வெறியர்கள்
  • இன பற்றாளர்கள்
  • கதை அளப்பார்கள்
  • கற்பனையாக சொல்வார்கள்
  • தமிழ் ஒரு திராவிட மொழி ,அதனால் அதற்கும் இந்தோ யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை .
என்றல்லாம் மேற்கத்திய மொழியாளர்கள் கூற ஆரம்பித்து விடுவார்கள் .அவர்களை பொறுத்தவரையில் ,மேற்கத்தியவர் /ஆங்கிலேயர் /கிரேக்கர் இவர்கள் தாம் எல்லாவற்றிலும் உயர்ந்தவர் என்று நம்பினர் .உலகின் முதல் மொழி ஐரோப்பாவில் தான் தோன்றி இருக்கும் ,ஆப்பிரிக்காவில் அல்ல !முதல் மனிதன் ஜெர்மனி பக்கத்தில் தான் தோன்றியிருப்பான் ,ஆப்பிரிக்காவில் அல்ல!
இவ்வாறாக அரசியல் சார்ந்த மொழி அறிஞர்கள் ,அவர்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான /முரணான கருத்துக்கள் எதுவும் வராமல் கண்ணாக பார்த்துக்கொள்கிறார்கள் .அதற்காக ,ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் ‘peer review ‘ என்ற இன்னொரு ஆராய்ச்சியாளர் ஒப்புடன் தான் பதிவிடலாம் என்ற முறை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஆக்ஸ் போர்ட் போன்ற பெரும் மொழியியல் பதிப்பகங்கள் ,தமிழை உயர்த்தி புத்தகம் என்றாலே ஏதாவது ஒரு காரணம் கூறி பதிக்க மறுத்துவிடுகிறார்கள் .
ஆனால் ,இந்த அரசியல் எதிலும் சாராத ஒரு தூய மொழியிலாளர் குழுவும் இல்லலாமலில்லை .இவர்கள் தாம் அவ்வப்போது தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் .கீழ்க்கண்டவர்கள் போன்றவர்கள் இதில் அடங்கும் .
  • ஜார்ஜ் எல் .ஹார்ட்
  • நோம் சோம்க்ஸ்சி
  • காட்சும டாய்
  • சூடோமோ காம்பே
  • பேரா .ஓனூ
இந்த அரசியல் சார்ந்த மொழியிலாளர்கள் கீழ்க்கண்ட அடிப்படையற்ற கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர் :
  • சம்ஸ்கிருத மொழி மட்டும் இனமே இல்லாமல் தன்னாலே தோன்றியது .எந்த மொழியும் தோன்ற ஒரு இனம் அவசியம் .ஆனால் ,சரித்திரத்தில் சம்ஸ்கிருத இனம் என்று எந்த காலக்கட்டத்திலும் இருந்ததில்லை என்பது உறுதியானாலும் இவர்கள் இந்த நம்பிக்கையில் திளைக்கிறார்கள் .
  • மொழி என்றால் அது பேசப்பட /பேசப்பட்டிருக்க வேண்டும் .பேசப்படாதது மொழி என்பதற்கு தகுதி பெறாது .ஆனால் ,இவர்கள் சரித்திரத்தில் எப்போதுமே பேசப்படாத சமஸ்கிருத்தை மொழியாக நம்புகிறார்கள் .
  • அப்படி பேசப்படாத ஒன்று ,பேசப்படும் மொழிகளுக்கு எப்படி தாயாக முடியும் ?ஆனால் ,இவர்கள் பேசப்படாத சமஸ்கிருதம் பேசப்படும் ஆங்கிலம் ,இந்தி போன்ற மொழிகளுக்கு தாய் என நம்புகிறார்கள் .இது ,பேசப்படாத ஜாவா கணினி மொழியிலிருந்து ,பேசப்படும் ஆங்கிலம் வந்தது என்பதற்கு சமமாகும் .
  • எந்த ஒரு மொழியும் ,ஒரு காலத்திற்கு பேசப்பட்டபின் தான் அதற்கு எழுத்து வடிவம் உருவாகும் .ஆனால் ,பேசவே படாத ‘தேவநாகரி ‘என்ற மொழிக்கு எழுத்து வடிவம் (Script )மட்டும் உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் .அந்த ‘தேவநாகரி ‘எழுத்து தான் சமஸ்கிருதத்திற்கும் ,இந்திக்கும் பயன் படுகிறதாம் !
மேற்கண்ட கோட்பாடுகளை எந்த கேள்வியும் கேட்காமல் நம்பினால் ,நமக்கும் பெரும் மொழியிலாளர் என்ற பன்னாட்டு அங்கீகாரம் எளிதில் கிடைத்து ,பண்டாரகர் பட்டமும் வாங்கி விடலாம் .ஆனால் ,கேள்வி கேட்டாலோ ,தனி நபர் தாக்குதல் தான் பதிலாக கிடைக்கும்!இந்த  அவல நிலை பன்னாட்டு மொழியியல் தளத்தில் உள்ளதை மறுக்க முடியாது .
2003 ல் பன்னாட்டு மொழியியல் பதிப்பான Linguist List என்ற அமெரிக்க ஆங்கில இதழில் ‘பழைய ‘என்ற தமிழ் சொல் தான் ‘Paleo ‘என்ற கிரேக்க சொல்லாகும் என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிரூபித்து பதிவிட்டிருந்தேன் .உடனே பல பெரும் மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ,எடுத்தவுடன் ‘அது அப்படி இருக்க முடியாது ‘என்ற முடிவுடன் தான் தங்கள் மடலை தொடங்கி இருந்தனர் .யாரும் ஆதாரங்களுக்கு எதிர் வாதங்களைக் கூட வைக்கவில்லை .ஆனால் ,எடுத்தவுடன் ’இது இருக்காது/இருக்க முடியாது  ‘என்று தான் வாதம் செய்தார்கள் .அதில் ஒரு அமெரிக்கப் பெண் ,என்னை அடிக்காத குறையாய் திட்டி இருந்தார் .உலகப் புகழ் பெற்ற ,மொழியியலின் தந்தை எனப்படும் பேரா .லாரி ட்ராஸ்க் அவர்களும் இதைப் பற்றி சில ஐயங்களை எழுப்பியிருந்தார் .அவர் எழுப்பிய ஐயங்களுக்கு எல்லாம் தகுந்த பதிலை பதிவிட்டு ,என்னுடைய முடிவுரையையும் அதே இதழில் பதிவிட்டிருந்தேன் .என்றாலும் ,வாசித்த யாரும் ஒரு பெரும் கண்டுபிடிப்பைக் கண்ட மனக்கிளர்ச்சியை பதிவிடவில்லை !ஏன் ?
                                                       நீர் என்பது 2 கூறு ஹைட்ரஜனும் 1 கூறு ஆக்ஸிஜனும் கொண்டது என்று ஒரு ஆப்பிரிக்க விஞ்ஞானி நிரூபித்தாலும்,இந்திய விஞ்ஞானி சொன்னாலும் , உலகமே கேள்வியின்றி ஒத்துக்கொள்கிறது .ஏனென்றால் ,அதில் அரசியல் கலப்பு இல்லை !ஆப்பிரிக்கர் சொன்னாலும் அமெரிக்கர் சொன்னாலும் அந்த உண்மை நிரூபிக்கப்பட்டதால் உண்மை தான் .                                     ஆனால் ,மொழியியலில் ஒரு தமிழன் ,தமிழ் தான் முதல் மொழி என்று நிரூபித்து ,அதை மற்றவர் ஒத்துக்கொண்டால் ,தமிழர் உயர்ந்தவர் என்பதை ஒத்துக்கொண்டதாக ஆகி விடும் என நினைக்கிறார்கள் .ஆக ,அங்கு அரசியல் தானாகவே தலையிடுகிறது !அதனால் உண்மையை மறுக்கும் /மறைக்கும் நிலை தானாக வருகிறது .

Monday, 30 July 2018

இராமர் காலத்தில் பேசப்பட்ட மொழி என்ன ?

வால்மீகி எழுதிய ராமாயண கதை  நடந்ததாக சொல்லப்படும்  காலம்   கி .மு .7300 வாக்கில் என்று சில அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள் .(காண்க : Ramayana's Age) ஆனால் ,இதை உறுதிப்படுத்த நம்பத்தகுந்த வழிகள் இல்லை .ஒரு வாதத்திற்காக ,அதை ஒத்துக் கொள்வதாக வைத்துக்கொண்டால் கூட  ,அந்தக் காலக் கட்டத்தில்  இராமர் உட்பட மக்கள் பேசிய மொழி என்னவாக இருந்திருக்கும்  ?
வாருங்கள் ,ஆராயலாம் !
                                வால்மீகி இராமாயணம் எழுதப்பட்ட  மொழி சமஸ்கிருதம் ஆகும் .இதை வால்மீ கி  கி .மு .500 வாக்கில் எழுதியதாக சொல்லப்படுகிறது .
ஒரு புத்தகம் எந்த மொழியில் இருக்கிறதோ ,அந்த மொழியில் தான் அதன் பாத்திரங்கள் பேசியிருப்பார்கள் என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,கிறிஸ்தவ வேதாகமத்தை சொல்லலாம் .அது எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு நூல் .ஆனால் ,அதன் நாயகன் இயேசு பேசிய மொழியோ அராமைக் என்ற ஒரு எபிரேய மொழியாகும் .அதனால் ,இராமாயணம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் இராமன் சமஸ்கிருதத்தில் தான் பேசியிருப்பார் என்று வாதிட முடியாது .
சமஸ்கிருதம் எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?
                                   சமஸ்கிருதம் என்ற மொழி எப்போது தோன்றியது ?அது எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?பேசப்பட்டிருந்தால் ஏன் அது வழக்கிலிருந்து ஒழிந்தது ? இவையெல்லாம் சமஸ்கிருதத்தை பற்றிய பல சுவையான கேள்விகள் !
                                     கி .மு .காலத்தில் வெண் தோல் ஆரியர் இந்தியாவுக்குள் வரும் போது ,அவர்களின் மாறுபட்ட தோற்றத்தை கண்டு இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் ,அவர்களை 'அரியன் 'என்று அழைத்தனர் .தமிழில் 'அரியன் 'என்றால் 'காண அரிதானவன் 'என்று பொருள் .இது அவர்களின் அரிதான தோற்றத்தை  குறிக்கும் சொல்லாகும் .அதுவே மருவி 'ஆரியன் 'என்று நாளைடைவில் மாறிவிட்டது .இந்த 'ஆரியர்கள் 'தங்களை என்ன பெயரில் அழைத்துக் கொண்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சரித்திர  தெளிவும் இல்லை .
அது போல் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழையும் போது  பேசிய மொழி என்ன என்பதற்கும் எந்த சான்றுகளும் இல்லை .நிச்சயமாக அவர்களுக்கென்று ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் .ஆனால் ,அது ஒரு குறிப்பிட தகுந்த மொழியாக இருந்ததற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை .
பின்னர் 'சமஸ்கிருதம்' என்ற மொழி தோன்றியதே இந்தியாவில் அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் என்பது உறுதி .      கி .மு .450 வாக்கில் பாணினி ,தமிழ் தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஒரு இலக்கணம் வகுத்த பிறகே 'சமஸ்கிருதம் 'என்ற மொழியே பிறந்தது .'சமஸ்கிருதம் ' என்ற சொல்லே தமிழில் இருந்து பிறந்த சொல் என்பது நம்மில் பலருக்கு தெரியாது .
தமிழ் 'சமம் '= சமப்படுத்தப்பட்ட 
தமிழ் 'கிறுக்கல்  '= எழுத்து 
ஆக ,சமஸ்கிருதம் =சமப்படுத்தப்பட்ட எழுத்து  என்று பொருள் படும் .எனவே ,'சமஸ்கிருதம்' என்ற மொழியின் பெயரே தமிழில் இருந்து தான் தோன்றியது என்பது முக்கியமான தகவல் ஆகும் .மேலும் ,அதன் பொருளே 'சமப்படுத்தப்பட்ட எழுத்து' என்று தான் உள்ளது ;'சமப்படுத்தப்பட்ட பேச்சு 'என்று இல்லை என்பதும் குறிப்பிட தக்கது .
                                              இந்த 'சமஸ்கிருதம்' எதை சமப்படுத்தியது ?ஆரியர்கள் வேத காலத்தில் பயன் படுத்திய ஒரு வகையான கச்சா மொழியை தான் சமப்படுத்தி 'சம்ஸ்கிருதம்' உருவாகியது .அந்த கச்சா வேத மொழி பாடல் வடிவில் தான் இருந்திருக்கிறது .அது அன்றாட வாழ்வில் பேசப்பட்ட வழக்கு மொழியாக இருந்ததாக தெரியவில்லை .
ஆக ,'சமஸ்கிருதம்' எந்தக் காலத்திலும் பேசப்பட்ட ஒரு மொழியாகத்  தெரியவில்லை .
இது  உண்மை தானா என்பதை வேறு கிளை வழிகளில் உறுதி படுத்த முடியுமா ?நிச்சயமாக முடியும் !
                                               ஒரு மொழி என்றாலே அதற்கு 'native speakers' அதாவது 'அன்றாட பேச்சாளர்கள் 'இருக்க வேண்டும் .அவர்கள் அந்த மொழியை அன்றாடம் பேச வேண்டும் .அவர்கள் அந்த மொழியை தாய் மொழியென்று உரிமை கோர வேண்டும் .
அப்படி எந்த ஒரு இனமும் சமஸ்கிருதத்தை தங்களுடைய தாய் மொழியாக இதுவரை அறிவித்ததில்லை என்பது உண்மையாகும் .சமஸ்கிருதத்தின் பெருமையை தினமும் சொல்லும் பிராமணர்களே அதை அன்றாடம் பேசுவதில்லை.2001
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,மாத்தூர் என்ற கர்நாடக கிராமத்தில் சுமார் 14000 பேர் 'சமஸ்கிருதம்' அவர்கள் தாய் மொழி என்று பதிவிட்டனர் .இது உண்மையல்ல என்பது ,அவர்களின் தாய் மொழி கன்னடம் /தமிழ் என்று அதற்கு முந்திய கணக்கெடுப்பில் பதிவாகியிருந்தது  கொண்டு உறுதி செய்யப் பட்டது .
பேச்சு வழக்கில் இருந்த மொழி அழியுமா ?
ஒரு மொழி, பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் பேசப்படாமல் ஆக முடியுமா ?நிச்சயமாக  முடியும் !ஆனால் ,எப்போது அப்படி முடியும் ?
  1. அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் இறந்து போகும் நேரத்தில் ,அந்த மொழியும் பேசப்படாத மொழியாக ஆகும் .
  2. அதற்கு முன் ,அந்த மொழி,முதலில்  'அழிவின் விளிம்பில் தள்ளப்பட்ட மொழிகள் பட்டியலில் ' List of endangered languages இடம் பெறும் .                                                                                              எடுத்துக்காட்டாக ,சமஸ்கிருதம் பேசப்பட்ட மொழியாக இருந்து ,அதை தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருந்து ,பின்னர் அழிந்து ,அவர்கள் 1000 பேராக குறையும் போதே இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவர் .இது வரை அப்படி சமஸ்கிருதம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்ற உண்மை ,சமஸ்கிருதம் பேசப்பட்டதே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது .
  3. மேலும் ,ஒரு வேளை சமஸ்கிருதம் பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்திருந்தால், அதை பேச்சு வழக்கிலிருந்து, அதை பேசியவர்கள் ஒரு போதும் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் சமஸ்கிருதம் அவ்வளவு ஒரு உயர்ந்த மொழியாகவும்,ராஜாக்கள் அங்கீகரித்த மொழியாகவும் இருந்ததாகும்  .அதை சமஸ்கிருத புரவலர்கள் நிச்சயமாக அழிய விட்டிருக்க மாட்டார்கள் .
ஆக ,மேற்கூறிய  காரணங்களால் ,சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு வழக்கில் இருந்த மொழியாக இருந்ததில்லை என்பது உறுதியாகிறது .
                                     அப்படியானால் இந்திய துணைக்கண்டத்தில் கி.மு .காலத்தில் பெருவாரியாக மக்களால்  பேசப்பட்ட மொழி தான் என்ன மொழியாக இருந்திருக்கும்  ?
சிந்து சமவெளி யில் பேசப்பட்ட மொழி என்ன ?
இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் 'சிந்து சமவெளி நாகரிகம் 'என்பது தெரிந்ததே .இது முதலில்  கி .மு .3000 வாக்கில் செழித்திருந்தாக கருதப்பட்டது .தற்போது ஆய்வாளர்கள் அது அதை விட பழமையானது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் .'சிந்து சமவெளி நாகரிகம் '  சுமார் 8000 வருட பழமையானது என்பது அவர்கள் கருத்து .(காண்க :Indus Age ).
இந்த நாகரிகத்தின் மக்கள் ,தமிழ் தான் பேசினர் என்பதற்கு சான்றாக  இன்னும் சிந்து சமவெளி பகுதிகளில் ,அதாவது தற்போதைய பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் பகுதிகளில், பல இடங்களின் பெயர் தமிழில் இருப்பது கண்டு பிடிக்க பட்டிருக்கிறது .(காண்க :Quora Answer )
ஆக ,தமிழ் மொழி இந்திய துணைக்கண்டத்தில் வடக்கில்  பலுச்சிஸ்தானிலிருந்து கீழ் எல்லை வரை  பேசப்பட்டிருக்கிறது என்பது தெளிவு .
இராமாயணத்தில் வரும் பெயர்கள் எந்த  மொழியை சேர்ந்தது ?
மேலும் ,இராமாயணத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் எல்லாம் தமிழ் வேர் கொண்டவை தான் .
  • இராமன்-தமிழ்- 'ரம்மியமானவன் '
  • வாலி -தமிழ் -வால் கொண்டவன் 
  • அகல்யா -தமிழ்- கல்லாக மாறியவள் 
  • அனுமான் -தமிழ்-ஆண் மந்தி 
  • இன்னும் இது போல் பல . 
ஆக ,இது வரை பட்டியலிடப்பட்ட சான்றுகளால் ,இராமாயணக் காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் ஐயமில்லை .
=======================================================================
தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கும் Proto-Indo-European Language-Face Unveiled ! (Notion Press-2017) By Alvaro Hans என்ற புத்தகம் என் வலைத்தள வாசகர்களுக்கு மட்டும்  75% சலுகை விலையில் கிடைக்கும் . இந்த இணைப்பை Notion Press அழுத்தி  coupon code LOVEGIFT என்று இட்டு பயனடையலாம்  .
============================================================




Monday, 7 September 2015

Etymology Of Sanskrit Word 'Veda'

The Etymology of the Sanskrit word "Veda" is given as 'sacred knowledge' at present.This etymology is not supported by any evidence by way of presence of related words in  Sanskrit .
The Etymon 'Vithu'
The word'Veda' is derived from Tamil word 'Vithu'(வித்து ) which means 'seed' This word is derived fro verb 'Vithai' which means 'to seed' One who sows 'knowledge' is 'Vithuvan'(வித்வான் ) which means 'expert' in Tamil.'Vitham' is 'variety' in Tamil.''Vindhu' is 'semen' in Tamil.
Therefore,it is clear that the word 'Veda' and its offshoots,'Vidya' are derived from this Tamil word 'Vithu'( வித்து) 

Sunday, 1 March 2015

Etymology of the Hindi word ‘Guru’

                                 The Hindi word ‘Guru’ is believed to be derived from Sanskrit.  Wiktionary says that it is from Hindi गुरू (guru) / Urdu گرو (guru), from Sanskrit गुरु (gurú, “venerable, respectable”), originally "heavy" and in this sense cognate to English grieve. (A traditional etymology based on the Advaya Taraka Upanishad (line 16)[1]describes the syllables gu as 'darkness' and ru as 'destroyer', thus meaning "one who destroys/dispels darkness
                             Now we may examine both views in depth. If both views are correct, we should be able to find other Sanskrit words containing ‘gu’ for ‘darkness’ or ru for ‘destroyer’.Similarly we find no supporting words for ‘heavy’ also either in Sanskrit or Hindi.
           The Tamil word ‘kuru’ means ‘small particles’ and is extensively used in everyday usage.”Kuru man’(குருமண் )means’fine sand’ and this word is cognate to Greek ‘krume’ and English’gravel’. Ear wax is called ‘Kathu Kurumi’.’Kurunai ’ is ‘small broken pieces of rice’ in TL.Prickly heat blisters are called ‘Ver Kuru’ in TL.’Kurugia’ is ‘small’ used in the sense of ‘narrow’. ‘Kuruni’ is a measure of a small piece of land.‘Kuru mannar’ is a King for small territory.
                               ‘Kuru’in TL also takes an extended meaning of’minute ie,very small’.Thus ‘Kurunathan’ a common Tamil name ,means ‘Master of any subject, who knows it to the minute level’. So teacher is called a ‘Kuru’ shortened form of‘Kurunathan’This TL word  got into Sanskrit and became’Guru’in Sanskrit.  

                    Apart from the clear meaning,  the presence of ample no of supporting words in Tamil indicates that the most probable and acceptable root for ‘Guru’ is Tamil ‘Kuru’(குரு )  only.The presently accepted view mentioned above cannot be correct in the absence of any supporting evidence.